மேலும் அறிய

Joju George Car Attacked: மக்கள் பாதிக்கப்படுறாங்க...! நியாயம் கேட்ட தனுஷ்பட நடிகரின் கார் கண்ணாடி உடைப்பு

சாலைமறியலில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அவதிப்படுவதாக கூறிய, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜின் கார் கண்ணாடியை கேரள காங்கிரசார் உடைத்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாட்டில் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கச்சா எண்ணெயின் விலை மிகவும் குறைவாக உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு கடுமையான வரிகள் மூலம் உயர்த்தி வருவதாக பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வரும் கேரளாவில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. கொச்சியில் உள்ள எடப்பள்ளி – வைடில்லா தேசிய நெடுஞ்சாலை 66ல் காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Joju George Car Attacked:  மக்கள் பாதிக்கப்படுறாங்க...! நியாயம் கேட்ட தனுஷ்பட நடிகரின் கார் கண்ணாடி உடைப்பு

காங்கிரசார் நடத்திய இந்த போராட்டத்தினால் அந்த நெடுஞ்சாலையில் சான்ற வாகனங்கள் எல்லாம் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இந்த சாலை மறியலினால் வேலைக்கு செல்பவர்கள், அத்தியாவசிய பணிக்கு செல்பவர்கள் என பலரும் மிகவும் அவதியுற்றனர். அந்த போக்குவரத்து நெரிசலில் மலையாள திரையுலகின் பிரபல நடிகரும், ஜெகமே தந்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவருமான ஜோஜூ ஜார்ஜ் தனது காரில் சிக்கிக்கொண்டார்.

இதையடுத்து, நடிகர் ஜார்ஜ் தனது காரில் இருந்து உடனடியாக கீழே இறங்கி சாலைமறியலில் ஈடுபட்டுள்ள காங்கிரசாரிடம் சென்றார். அங்கு அவர்களிடம் இந்த சாலை மறியலினால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், மருத்துவ மற்றும் அவசர தேவைகளுக்காக செல்பவர்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் கூறினார்.

Joju George Car Attacked:  மக்கள் பாதிக்கப்படுறாங்க...! நியாயம் கேட்ட தனுஷ்பட நடிகரின் கார் கண்ணாடி உடைப்பு

நடிகர் ஜார்ஜூடன் சேர்ந்து சாலைமறியலில் சிக்கிக்கொண்ட வாகன ஓட்டிகள் பலரும் காங்கிரசாரிடம் இந்த போராட்டத்தினால் அவதிப்படுவதாக கூறியுள்ளனர். ஆனால், காங்கிரஸ் கட்சியினர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் குடித்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும், அவர் அங்குள்ள மகளிர் காங்கிரசாரிடம் தகாத முறையில் நடப்பதாகவும் குற்றம் சாட்டினர். மேலும், ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் நடிகர் ஜோஜூ ஜார்ஜின் கார் கண்ணாடியை உடைத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடிகர் ஜார்ஜை பத்திரமாக மீட்டு அந்த இடத்தில் இருந்து அழைத்துச் சென்றனர்.

இதுதொடர்பாக பேசிய நடிகர் ஜோஜூ ஜார்ஜ், “ நான் ஏதும் குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக போராடவில்லை. அவர்களது போராட்ட முறைகளுக்கு எதிராகதான் போராடினேன். எனது காருக்கு அடுத்த காரில் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கக்கூடிய இளம் நோயாளி இருந்தார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி எந்த போராட்டத்தின்போதும் சாலையை மறிக்கக்கூடாது.  பலரும் காரின் உள்ளேயே அமர்ந்திருந்தனர். சிலர் சாலையில் வியர்த்து வேர்க்க இருந்தனர். அதனால்தான் நான் அவர்களிடம் சென்று நீங்கள் செய்வது போக்கிரித்தனம் என்றேன்.

Joju George Car Attacked:  மக்கள் பாதிக்கப்படுறாங்க...! நியாயம் கேட்ட தனுஷ்பட நடிகரின் கார் கண்ணாடி உடைப்பு

அவர்கள் நான் குடித்திருந்ததாக புகார் செய்துள்ளனர். ஒரு காலத்தில் நான் குடித்தேன். ஆனால், இப்போது நான் குடிப்பதில்லை. சில தலைவர்கள் என்னுடைய தாய், தந்தை பற்றி அவதூறாக பேசுகின்றனர். அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள்? ஒருவேளை அவர்கள் என்னை பேசலாம். அடிக்கலாம். ஆனால், எனது பெற்றோர்கள் என்ன செய்தார்கள்?”

நடிகர் ஜோஜூ ஜார் தனது காரை காங்கிரஸ் கட்சியினர் சேதப்படுத்தியதாகவும், தனது பெற்றோர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். மருத்துவ பரிசோதனையில் நடிகர் ஜோஜூ அந்த நேரத்தில் குடிக்கவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. நடிகர் ஜோஜூஜார்ஜ் நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் நடிப்பிற்கான தேசிய விருதையும் வென்றுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget