மேலும் அறிய

Hema Committee Report: அட்ஜஸ்ட்மெண்ட் கொடுமை, டாய்லட் கூட இல்ல.. மலையாள சினிமாத்துறையை தோலுரித்த ஹேமா கமிஷன்!

Hema Committee Report: சினிமாத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள், பிரச்னைகள் குறித்து ஹேமா ஆணையம் அறிக்கையில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

Hema Report: மலையாள சினிமாத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து ஒய்வுபெற்ற நீதிபதி கே. ஹேமா தலைமையிலான ஆணையம் அறிக்கை ஒன்றை தயார் செய்தது. 4 ஆண்டுகளுக்கு முன்பே, கேரள அரசிடம் அது சமர்பிக்கப்பட்டது.

மலையாள சினிமாத்துறையை தோலுரித்த ஹேமா கமிஷன்:

சினிமாத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து அந்த அறிக்கையில் விரிவாக பேசப்பட்டுள்ளது. பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக உடன்பட தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக பல பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

235 பக்கம் கொண்ட அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சினிமாவில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு, சமரசம் செய்து கொண்டு இருக்க வேண்டும் என தங்களிடம் சொல்லப்பட்டதாக பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தங்கள் அனுமதி இன்றி ஹோட்டல் அறைகளில் ஆண் சகாக்கள் நுழைவார்கள் என்றும் காவல்துறையில் புகார் அளிக்க முற்பட்டால் சினிமாவில் தடை விதித்துவிடுவோம் என மிரட்டுவார்கள் என்றும் பெண்கள் கூறியுள்ளனர். திரைப்படம் எடுக்கும் செட் அருகே தங்குவதற்காக ஏற்பாடு செய்து தரப்படும் இடம் பாதுகாப்பாக இருக்காது என்றும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சத்தில் குடும்பத்தினருடன்தான் செட்டில் இருப்போம் என்றும் பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மோசமான பிரச்னைகளை எதிர்கொள்ளும் பெண்கள்: "சினிமா துறையில் தங்கள் அனுபவங்களை வெளியே சொல்வதன் மூலம் அபாயம் இருப்பதாக பெண்கள் கூறினர். தாங்கள் கூறிய உண்மைகள் அவர்களை சித்திரவதை செய்தவர்களின் காதுகளுக்கு எட்டினால், மிகப்பெரிய ஆபத்து நேரிடும்.

குற்றம் செய்தவர்கள், மிகவும் செல்வாக்கு படைத்தவராக உள்ளனர். சினிமாவில் பெண்கள் அனுபவித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல்களை கேட்கும்போது அதிர்ச்சியான அனுபவமாக இருந்தது. திரைப்பட செட்டில் சுத்தமான கழிவறை மற்றும் உடை மாற்றும் அறை போன்ற அடிப்படை மனித உரிமைகள் கூட பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன.

மாதவிடாய் காலங்களில் பெண் கலைஞர்கள் கடினமான சூழலை எதிர்கொள்கின்றனர். சிறுநீர் போகாமல் இருக்க நீண்ட காலத்திற்கு தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க பெண்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

ஒட்டுமொத்த மலையாள திரையுலகையே சில ஆண்கள்தான் கட்டுப்படுத்துகிறார்கள். மேலும் அவர்கள் சினிமாவில் பணிபுரியும் மற்ற நபர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சினிமாவில் இந்த நிலை மிகவும் அதிர்ச்சியளிக்கிறது" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அத்வானிக்கு பாராட்டு.. நேரு, இந்திராகாந்தி மீது விமர்சனம் - காங்கிரசை காண்டாக்கிய சசிதரூர்!
அத்வானிக்கு பாராட்டு.. நேரு, இந்திராகாந்தி மீது விமர்சனம் - காங்கிரசை காண்டாக்கிய சசிதரூர்!
RSS: இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரலாமா? கன்டிஷன் போட்ட மோகன் பகவத்
RSS: இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரலாமா? கன்டிஷன் போட்ட மோகன் பகவத்
Sabarimala: ஐயப்ப பக்தர்களே... சபரிமலைக்கு போறீங்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க
Sabarimala: ஐயப்ப பக்தர்களே... சபரிமலைக்கு போறீங்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க
Mahindra XEV 9S: ப்ரீமியமும், டெக்கும் சேர்ந்த கார் இப்படிதான் இருக்கும்..! கலங்கும் போட்டியாளர்கள், கலக்கும் மஹிந்த்ரா
Mahindra XEV 9S: ப்ரீமியமும், டெக்கும் சேர்ந்த கார் இப்படிதான் இருக்கும்..! கலங்கும் போட்டியாளர்கள், கலக்கும் மஹிந்த்ரா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ
SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அத்வானிக்கு பாராட்டு.. நேரு, இந்திராகாந்தி மீது விமர்சனம் - காங்கிரசை காண்டாக்கிய சசிதரூர்!
அத்வானிக்கு பாராட்டு.. நேரு, இந்திராகாந்தி மீது விமர்சனம் - காங்கிரசை காண்டாக்கிய சசிதரூர்!
RSS: இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரலாமா? கன்டிஷன் போட்ட மோகன் பகவத்
RSS: இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரலாமா? கன்டிஷன் போட்ட மோகன் பகவத்
Sabarimala: ஐயப்ப பக்தர்களே... சபரிமலைக்கு போறீங்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க
Sabarimala: ஐயப்ப பக்தர்களே... சபரிமலைக்கு போறீங்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க
Mahindra XEV 9S: ப்ரீமியமும், டெக்கும் சேர்ந்த கார் இப்படிதான் இருக்கும்..! கலங்கும் போட்டியாளர்கள், கலக்கும் மஹிந்த்ரா
Mahindra XEV 9S: ப்ரீமியமும், டெக்கும் சேர்ந்த கார் இப்படிதான் இருக்கும்..! கலங்கும் போட்டியாளர்கள், கலக்கும் மஹிந்த்ரா
Vaali:
Vaali: "நான் எலும்புக்கு வாலாட்டும் நாய்.." கவிஞர் வாலி அப்படி சொன்னது ஏன்?
Crime: என் பொண்டாட்டிய கண்டுபிடிச்சு கொடுங்க சார்.. ”ஐ லவ் யு மா” என்னமா நடிக்குற மேன் நீ? ஆடிப்போன போலீஸ்
Crime: என் பொண்டாட்டிய கண்டுபிடிச்சு கொடுங்க சார்.. ”ஐ லவ் யு மா” என்னமா நடிக்குற மேன் நீ? ஆடிப்போன போலீஸ்
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
Embed widget