மேலும் அறிய

பக்தர்களே! காசி தமிழ் சங்கமத்திற்கு போக ரெடியா? இந்த இணையதளத்தில் உடனே பதிவு செய்யுங்க

காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது பதிப்பில் கலந்து கொள்வதற்கான இணையதளம் திறக்கப்பட்டுள்ளது.

காசி தமிழ் சங்கமத்தின் 3ஆவது பதிப்புக்கு செல்வதற்கான பதிவு இணையதளத்தை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், காசி தமிழ்ச் சங்கத்தின் 3ஆவது பதிப்பு வரும் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கும் என்று அறிவித்தார்.

10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முடிவடைய உள்ளது. சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்தில், பிப்ரவரி 1ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

மூன்றாம் ஆண்டில் காசி தமிழ் சங்கமம்:

கல்வி அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் குமார், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநர் திரேந்திர ஓஜா, உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் சுனில் குமார் பர்ன்வால், பாரதிய பாஷா சமிதியின் தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி உள்ளிட்ட  பிற உயரதிகாரிகளும் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், "தமிழகம் - காசி இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பு காசி தமிழ்ச் சங்கமம் 3ஆம் பதிப்பின் மூலம் மீண்டும் உயிர் பெறும். பிரதமர் மோடியின் சிந்தனையில் உதித்த காசி தமிழ்ச் சங்கமம், தமிழ்நாடு - காசி இடையேயான காலத்தால் அழியாத பிணைப்பை கொண்டாடவும், நாகரிக தொடர்புகளை வலுப்படுத்தவும், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை மேம்படுத்தவும் உத்வேகம் அளிப்பதற்கான முயற்சியாகும். 

பதிவு செய்வதற்கான இணையதளம்:

இந்த ஆண்டு, காசி தமிழ் சங்கமம் மகா கும்பமேளா நிகழ்ச்சியுடன் ஒன்று சேர்ந்து நடைபெறுவதால் தனிச் சிறப்பான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அயோத்தியில் ஸ்ரீ ராம் லல்லாவின் 'பிராண பிரதிஷ்டாவுக்கு' பிறகு நடைபெறும் முதல் சங்கம நிகழ்ச்சி இது. 

காசி தமிழ்ச் சங்கமம் 3ஆவது பதிப்பில் தமிழக மக்கள் முழு அளவில் பங்கேற்க வேண்டும். அகத்திய முனிவரின் பல்வேறு பரிமாணங்கள், தமிழ்நாட்டின் சுகாதாரம், தத்துவம், அறிவியல், மொழியியல், இலக்கியம், அரசியல், பண்பாடு, கலை ஆகிய துறைகளில் அவர் அளித்த அளப்பரிய பங்களிப்புகள் குறித்த கண்காட்சி, கருத்தரங்குகள், பயிலரங்குகள், புத்தக வெளியீடு போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
"வேற நாடா இருந்தா RSS தலைவரை கைது செஞ்சிருப்பாங்க" கொதித்த ராகுல் காந்தி!
ind w Vs ire w; என்னா அடி... அயர்லாந்து அணியை சிதறடித்த இந்திய மகளிர் அணி... ஒருநாள் தொடரை கைப்பற்றியது
என்னா அடி... அயர்லாந்து அணியை சிதறடித்த இந்திய மகளிர் அணி... ஒருநாள் தொடரை கைப்பற்றியது
ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
"வேற நாடா இருந்தா RSS தலைவரை கைது செஞ்சிருப்பாங்க" கொதித்த ராகுல் காந்தி!
ind w Vs ire w; என்னா அடி... அயர்லாந்து அணியை சிதறடித்த இந்திய மகளிர் அணி... ஒருநாள் தொடரை கைப்பற்றியது
என்னா அடி... அயர்லாந்து அணியை சிதறடித்த இந்திய மகளிர் அணி... ஒருநாள் தொடரை கைப்பற்றியது
ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன?  என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன? என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
உதயநிதி ஸ்டாலினால் கைவிட்டுப்போன விஜய் பட வாய்ப்பு...புலம்பும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேணி
உதயநிதி ஸ்டாலினால் கைவிட்டுப்போன விஜய் பட வாய்ப்பு...புலம்பும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேணி
Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
Happy Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
PM Modi; பிரதமர் மோடியை பிரமிக்க வைத்த 3 போர் கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
பிரதமர் மோடியை பிரமிக்க வைத்த 3 போர் கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
Embed widget