Highcourt Order : `இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை ஒலிபெருக்கிகளுக்குத் தடை!’ : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
கர்நாடக உயர் நீதிமன்றம் கர்நாடகாவில் மத வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள் முதலான அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளைத் தடை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ள ஆணையில் கர்நாடகாவில் மத வழிபாட்டுத் தலங்கள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் முதலான அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகள் பயன்பாட்டைத் தடை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபது ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி அஷோக் கினாகி முதலானோர் அடங்கிய அமர்வு அரசு அதிகாரிகள் ஒலிபெருக்கிகள், பொதுமக்களைத் தொடர்பு கொள்ளும் ஒலிச் சாதனங்கள், இசைப் பொருள்கள் முதலானவற்றை இரவு நேரத்தில் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அதுகுறித்து மூன்று வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றம் இதுகுறித்து, `அரசு அதிகாரிகள் இந்த விவகாரத்தில் போதிய நடவடிக்கைகளை எடுத்து அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகள், பொதுமக்களைத் தொடர்பு கொள்ளும் ஒலிச் சாதனங்கள், இசைப் பொருள்கள் முதலானவற்றைp பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளது.
இந்த மனுவின் மீதான விசாரணையின் போது, கர்நாடக உயர் நீதிமன்றம் அதிகாரிகள் சில நிறுவனங்களுக்கும், மத வழிபாட்டுத் தலங்களுக்கும் ஒலிபெருக்கி பயன்படுத்த சட்டவிரோதமாக நிரந்தர அனுமதியை வழங்கியுள்ளதாக விமர்சித்திருந்தது.
எனினும், அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் ஒலி மாசுக் கட்டுப்பாட்டுச் சட்ட விதிமுறைகள் மற்றும் காவல்துறை சட்டத்தின் கீழ் அத்தகைய அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என வாதாடப்பட்டது. நீதிமன்றம் இதனைக் கணக்கில் எடுத்துக் கொண்டதோடு, அரசு அதிகாரிகளை இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக உயர் நீதிமன்றம், `மசூதிகளிலும், அரசு நடத்தும் கோயில்கள் உள்பட பல்வேறு கோயில்கள் ஆகிய மத வழிபாட்டுத் தலங்களிலும், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் ஆகிய பகுதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது’ எனவும் கூறியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ராகேஷ் என்பவர் தொடுத்திருந்த இந்த மனு மீதான விசாரணை கடந்த மூன்று வாரங்களாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்