மேலும் அறிய

Crime: பகத் சிங் தூக்கிலிடப்படுவதை ஒத்திகை செய்து பார்த்த 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்! என்ன நடந்தது?

கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் பகத் சிங் தூக்கிலிடப்பட்டதை அதேபோன்று ஒத்திகை பார்த்த 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் பகத் சிங் தூக்கிலிடப்பட்டதை அதேபோன்று ஒத்திகை பார்த்த 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 1ம் தேதி கன்னடா ராஜ்யோத்சவா (Karnataka Formation Day) தினம் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, பள்ளியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த நிகழ்ச்சியில் அந்தப் பள்ளியில் படித்துவந்த 7ம் வகுப்பு மாணவனான சஞ்சய் கவுடா, பகத் சிங் போன்று வேடமணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தார். 

இதற்காக தொடர்ச்சியாக ஒத்திகையில் சஞ்சய் கவுடா ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

சஞ்சய் கவுடா ஒத்திகைக்காக கயிறை எடுத்து ஃபேனில் மாட்டியிருக்கிறார். கம்பிளி தொப்பியை தலையில் அணிந்து கொண்ட அந்தச் சிறுவன், கழுத்தில் கயிறை இறுக்கமாக மாட்டிக் கொண்டிருக்கலாம் என்றும் கட்டிலில் இருந்து கீழே குதித்த போது எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தை இறுக்கி அவன் உயிரிழந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டில் வந்து பார்த்த பெற்றோர் சிறுவன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவர்கள் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்ததனர். எனினும், அவர்கள் அங்கு செல்லும் முன்னே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளியிலும் பகத்சிங் நாடகத்துக்கான ஒத்திகையில் சிறுவன் ஈடுபட்டார். ஆனால், நாற்காலி, மேஜை போன்றவற்றை பயன்படுத்தவில்லை என்று அந்தச் சிறுவனின் தந்தை வருத்தத்துடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

================

இதனிடையே  கர்நாடக சித்ரதுர்காவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது உறவினரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரை பல முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததற்காக காவல்துறை ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜி. பி. உமேஷ் என்ற குற்றம்சாட்டப்பட்டவர் மீது அவரது 25 வயது உறவினர் அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தப்பி ஓடிவிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில், தங்கள் குடும்பத்தில் நிலத் தகராறு நிலவி வருவதாகவும், தனது தாயின் வேண்டுகோளின் பேரில் உமேஷ் காவல்துறை ஆய்வாளராக நியமிக்கப்பட்டு 2017இல் இப்பிரச்சினையை தீர்க்க உதவினார் என்றும் குறிப்பிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை, தான் காவல்துறை ஆய்வாளராக நியமிக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சந்திப்பதற்காக வர சொல்லி இருக்கிறார்.

கடந்த 2017ஆம் ஆண்டு, செப்டம்பர் 13ஆம் தேதி அன்று உமேஷை சந்திக்கச் சென்றபோது, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதை யாரிடமும் சொல்ல வேண்டாம், இல்லையெனில் அவரது குடும்பத்தையே அழித்துவிடுவேன் என மிரட்டி உள்ளார்.

உமேஷ் தனக்கு அடிக்கடி போன் செய்வதாகவும், ஆனால், அவரின் போன் காலை ஏற்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். கடைசியாக, அவரது வீட்டிற்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க தொடங்கி இருக்கிறார். அவருக்கு பயந்து, பாதிக்கப்பட்ட பெண் வேறு இடத்தில் பணி செய்திருக்கிறார்.

ஆனால், அங்கும் வந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார் உமேஷ். அவருக்கு ஏற்கனவே, இரண்டு மனைவிகள் உள்ளனர். மேலும், தன்னை மூன்றாவது மனைவியைப் போல கூட வாழச் சொன்னதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

அக்டோபர் 2, 2021 அன்று சுகாதார மையத்தில் கருக்கலைப்பு செய்ததாகவும் மேலும், உமேஷ் தன்னை பலமுறை வற்புறுத்தி மாத்திரைகள் சாப்பிட வைத்து கருவை கலைக்க வைத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டி உள்ளார்.

தன்னைக் விட்டுவிடும்படி உமேஷிடம் அந்தப் பெண் பலமுறை கெஞ்சி இருக்கிறார். ஆனால், அவரின் அட்டூழியம் தொடர்ந்து வந்துள்ளது. மாறாக, அவர் தனக்குக் கீழ்ப்படியவில்லை என்றால், மீண்டும் ஒரு முறை நிலத் தகராறை பிரச்னையை தொடங்கி அவரடைய பெற்றோரை ரோட்டில் வர வைப்பேன் என எச்சரித்துள்ளார்.

இதையடுத்து, காவல்துறை ஆய்வாளராக உள்ள உமேஷ், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget