பொள்ளாச்சி 2.0.. 6 பேர் சேர்ந்து வெறிச்செயல்.. சிறுமியை வீடியோ எடுத்து பிளாக்மெயில்
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை போன்று கர்நாடகாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆறு பேர் சேர்ந்து சிறுமியை இரண்டு முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.

15 வயது சிறுமியை 6 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடகாவில் நடந்த இந்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி என்று கூட பாராமல் அவரை 2 முறை கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
கர்நாடகாவில் பொள்ளாச்சி 2.0
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த அறிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதமாக ஐநா தலைவர் சமீபத்தில் அதிர்ச்சி தரவை பகிர்ந்திருந்தார். அதாவது, ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை போன்று கர்நாடகாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆறு பேர் சேர்ந்து சிறுமியை இரண்டு முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.
சிறுமியை வீடியோ எடுத்து பிளாக்மெயில்:
முதல் முறையாக அந்தக் கொடூரமான செயலைப் பதிவுசெய்த அவர்கள், அந்த வீடியோவை வெளியிடுவோம் என்று மிரட்டி, இரண்டாவது முறையாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "முதல் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சிறுமியின் நண்பர், பெலகாவியின் புறநகரில் உள்ள ஒரு மலைப்பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றார். அங்கு அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அந்த செயல் தொலைபேசியில் பதிவு செய்தனர்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிறுமியை மிரட்டத் தொடங்கினார்கள். வீடியோவை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டினார். வீடியோ வெளியிடுவேன் எனக் கூறி இரண்டாவது முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மீண்டும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த செயலைப் பதிவு செய்துள்ளார்கள். மீண்டும் மிரட்டியுள்ளனர். இறுதியில், சிறுமி நேற்று போலீசில் புகார் அளித்தார். FIR பதிவு செய்யப்பட்டது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நாளில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற குற்றவாளிகளை போலீசார் இப்போது தேடி வருகின்றனர்.





















