Shocking Video: பெண் டோல் கேட் ஊழியரை இடித்த கார்.. தடுக்க முயன்ற நபர் கொலை.. அதிர்ச்சி வீடியோ!
வீடியோவின் ஆதாரத்தின்படி, திவாரி மீது மோதிய காரில் “உத்தரபிரதேச அரசு” என்று எழுதப்பட்டிருந்தது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் டோல் வரி கேட்டு காரின் முன் நின்ற பெண் ஊழியர் மீது கார் டிரைவர் இடித்து சென்ற வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. மேலும், தடுக்க முயன்ற நபரையும், அந்த கார் டிரைவர் காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது..?
உத்தரபிரதேச மாநிலம் கார்பூரில் உள்ள மீரட் டோல் கேட்டில் நேற்று இரவு மாநில அரசு என்று எழுதப்பட்டிருந்த கார் ஒன்று வந்துள்ளது. அப்போது அங்கு பண்புரிந்த பெண் ஊழியர் அந்த காரின் வந்த நபரிடம், டோல் கேட் பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்த காரை ஓட்டி வந்த நபர் பணம் கொடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
டோல் கேட் பணத்தை வாங்க வேண்டும் என்று அந்த காரின் முன் பெண் சுங்கச்சாவடி ஊழியர் நின்றுள்ளார். அப்போது காரை ஓட்டி வந்த நபர், அந்த பெண்ணை இடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்த பெண்ணை இடித்த கையோடு, அங்கு முன் நின்ற சில கார்களையும் அந்த நபர் இடித்து தள்ளியுள்ளார்.
இதனால் நவாப்கஞ்ச் குடியிருப்பாளர் ரவீந்திர திவாரி உட்பட பல கார்களை அந்த நபர் இடித்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த திவாரி உள்பட பல டிரைவர்கள் அந்த பெண் ஊழியர் இடித்த காரை நிறுத்தக்கோரி தங்கள் கார்களில் இருந்து இறங்கினர். அந்த காரில் பயணித்த நபரை இறங்க சொல்லியும் அந்த நபர் காரை நிறுத்தமால், மெதுவாக ஓட்டியபடி சென்றுள்ளார். எப்படியாவது காரை நிறுத்த வேண்டும் என்று எண்ணிய திவாரி காரின் முன் நின்றார்.
அப்போது அந்த டிரைவர் வேகமாக திவாரி மீது மோதி, அவரை சுமார் 100 மீட்டர் வரை இழுத்து சென்று போட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், படுகாயமடைந்த திவாரியை ஹாலெட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், திவாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
UP के कानपुर में हिट एंड रन, वकील को गाड़ी से कुचलकर मार डाला
— Sachin Gupta (@SachinGuptaUP) June 24, 2024
ये गाड़ी एक्सीडेंट करके भाग रही थी। अधिवक्ता भोला तिवारी उसे रोकने के लिए गाड़ी के आगे खड़े हो गए। ये गाड़ी उनको भी कुचलकर भाग गई। pic.twitter.com/QEukxh9UkX
தப்பியோடிய டிரைவர்:
திவாரியை காரால் வேகமாக இடித்து தாக்கி விட்டு, அங்கிருந்து அந்த டிரைவர் தப்பியோடியுள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்த நபர் ஒருவர், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். வீடியோவின் ஆதாரத்தின்படி, திவாரி மீது மோதிய காரில் “உத்தரபிரதேச அரசு” என்று எழுதப்பட்டிருந்தது. அது அரசாங்க அதிகாரிக்கு சொந்தமானது என்றாலும், அந்த காரை ஓட்டிய டிரைவர் மற்றும் காரின் உரிமையாளர் யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோஹ்னா காவல் நிலையத்திற்குட்பட்ட ஆர்யா நகர், ரெய்னா மார்க்கெட் சௌகி பகுதிக்கு அருகே இரவு 9:00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் கண்டு, வாகனத்தின் நம்பர் பிளேட்டின் அடிப்படையில் சோதனை நடத்தினர்.
குற்றவாளி கைது:
சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே குற்றஞ்சாட்டப்பட்ட சுபம் விமலை உன்னாவ்வில் இருந்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.