Kangana Ranaut Tweets on Corona | Calm down முட்டாள்களே.. கங்கனா ரனாவத்தின் ட்வீட்டால் கடுப்பான ட்விட்டர்வாசிகள்..
"ஆக்சிஜன் குறைவை நிரந்தரமாக போக்க அதிக மரங்களை நடவேண்டும்' என்று பதிவிட்டிருக்கிறார் கங்கனா ரனாவத்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக டெல்லி,மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பல மடங்கு அதிகரித்து வருகிறது. இரண்டாவது அலையில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருவதால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. என்ன வேண்டுமென்றாலும் செய்து ஆக்சிஜன் கிடைப்பதை உறுதிப்படுத்துங்கள் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “யாருக்கெல்லாம் தற்போது ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளதோ அவர்கள் இந்த மூச்சு பயிற்சியை செய்யுங்கள். இது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே. ஆக்சிஜன் குறைவை நிரந்தரமாக போக்க அதிக மரங்களை நடவேண்டும். மரத்தை நட முடியாது என்றால் அதனை வெட்டக் கூடாது” எனப் பதிவிட்டுள்ளார்.
Anybody who is feeling low levels of oxygen do try this please. Planting trees is the permanent solution, if you can’t then don’t cut them either, recycle your clothes, eat Vedic diet, live organic life, this is a temporary solution, for now this should help, Jai Shri Ram 🙏 https://t.co/lBiw6VAUtT
— Kangana Ranaut (@KanganaTeam) April 21, 2021
கொரோனா நோய் தொற்று உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டால் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும். அங்கு அவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. மேலும் ஆக்சிஜன் குறைபாடு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, “மனிதர்களின் உயிர் அரசு முக்கியமானதாக தெரியவில்லையா? பிச்சை எடுங்கள், கடன் வாங்குகள் அல்லது திருடுங்கள்..ஆனால் உயிருக்கு போராடும் நபர்களுக்கு எப்படியாவது ஆக்சிஜன் சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்” என்று மத்திய அரசுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
Anyone who is angry, depressed and rattled with current situation is an entitled brat,if tom Sun decides not to shine it does not owe you any explanation,this earth which nurtured and mothered you suddenly became hostile,she does not owe you an explanation.Calm down you fools 1/2
— Kangana Ranaut (@KanganaTeam) April 20, 2021
இந்த சூழலில் கங்கனா ரனாவாத்தின் அடுத்த பதிவு,”தற்போதைய நிலையை கண்டு கோபமாகவும் பதற்றமாகவும் உள்ளவர்கள் சிறுகுழந்தை போன்றவர்கள். நாளைக்கே சூரியன் தனது ஒளியை தரவில்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள். நாம் வாழ்வதற்கு ஏதுவான சூழல் பூமியில் இல்லாவிட்டால் என்ன செய்யமுடியும். பதற்றப்படாமல் இருங்கள்.
பூமி தன்னுடைய பாதையில்தான் சுற்றும் உங்களுடைய பணத்திற்கு ஏற்றவாறு சுற்றாது” எனப் பதிவிட்டுள்ளார்.