(Source: ECI/ABP News/ABP Majha)
Joe Biden: ஜி20 மாநாடு.. பொருளாதாரத்தில் இந்தியா - அமெரிக்கா - ஐரோப்பாவில் புதிய அத்தியாயம் - அதிபர் பைடன் ட்வீட்
ஜி20 உச்சி மாநாடு மூலம் புதிய பொருளாதார தடம் உருவாக்கப்பட உள்ளதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செய்துள்ள புதிய ஒப்பந்தம், பிராந்திய முதலீட்டில் புதிய அத்தியாயம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் டிவீட்:
இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வியட்நாம் புறப்பாட்டார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் அவர் தனது பயணத்தை மேற்கொண்டார். இந்நிலையில், ஜி20 மநாடு தொடர்பாக ஜோ பைடன் அதிபருக்கான அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொருளாதாரத்தில் புதிய அத்தியாயம்:
அந்த டிவிட்டர் பதிவில், “அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இணைந்து புதிய இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்திற்கான வரலாற்று ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்த திட்டம் பொருளாதாரத்திற்கான வழித்தடங்களை ஏற்படுத்துவது மட்டுமின்றி, பிராந்திய முதலீட்டில் புதிய அத்தியாயமாக இருக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
I'm proud to announce that the U.S., India, Saudi Arabia, UAE, France, Germany, Italy and EU finalized a historic agreement for a new India-Middle East-Europe Economic Corridor.
— President Biden (@POTUS) September 9, 2023
This project is about more than just laying tracks.
This is a game-changing regional investment. pic.twitter.com/JPbwFYcUeQ
பொருளாதார வழித்தடம்:
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை செயல்படுத்துவதன் மூலம் சில உறுதிமொழிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி,
- இரண்டு கண்டங்களின் குறுக்கே துறைமுகங்களை இணைக்கும் வர்த்தகம்,
- இதன் மூலம் வர்த்தகம் எளிமையாகும், சுத்தமான எரிசக்தி ஏற்றுமதி மற்றும் நம்பகமான சுத்தமான மின்சாரத்திற்கான அணுகல் கிடைக்கும்
- இணையத்தைப் பாதுகாக்கும் சமூகங்களை இணைக்கும் கேபிள்களை அமைப்பதை எளிதாக்கும்
- நிலையான மற்றும் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்” என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜி20 உச்சிமாநாடு:
உலக பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட, ஜி20 கூட்டமைப்பிற்கு நடப்பாண்டு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. அதன்படி, இரண்டு நாள் நடைபெறும் உச்சி மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். பிரகதி மைதானத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், உக்ரைன் போர், சர்வதேச விவகாரங்களில் சேர்ந்து செயல்படுவது போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இறுதியில் டெல்லி உச்சி மாநாட்டின் தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.