Yamuna River: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் தலைநகர்.. தத்தளிக்கும் டெல்லி மக்கள்.. யமுனா நதியின் நிலவரம் என்ன?
யமுனா நதியின் நீர்மட்டம் சற்று குறைந்துள்ளதாகவும் இன்னும் 12 மணி நேரத்தில் நீர் வடிந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யமுனா நதியின் நீர்மட்டம் சற்று குறைந்துள்ளதாகவும் இன்னும் 12 மணி நேரத்தில் நீர் வடிந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Arterial road at ITO remains waterlogged in the national capital of Delhi#DelhiFlood pic.twitter.com/V6J2MUo6j3
— ANI (@ANI) July 15, 2023
ஜூன் மாதம் 8 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை தருவது தென்மேற்கு பருவமழை தான். கேரளா மாநிலத்தில் ஜூன் மாதம் கனமழையால் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கனமழை காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், உத்திர பிரதேசம், உத்திரகண்ட், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை கொட்டித்தீர்த்தது. தலைநகர் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஏராளமான வீடுகள், வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
#WATCH | Cars submerged, buildings flooded on Bela Road in Delhi's Civil Lines are as water from overflowing Yamuna river entered the area pic.twitter.com/SSq82XjPKz
— ANI (@ANI) July 15, 2023
அதுமட்டுமின்றி யமுனா நதியில் நீர் மட்டம் அபாயகரமான அளவை எட்டியது. இதனால் கரையோர மக்கள் உடனடியாக அப்பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை யமுனை ஆற்றின் நீர் மட்டம் 208.66 மீட்டராக இருந்தது. இதனால் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
The water level in Yamuna river was recorded at 207.53 mtrs at 0900 hours in Delhi. https://t.co/G7Shqq3NjL
— ANI (@ANI) July 15, 2023
தற்போது மழை சற்று ஓய்ந்துள்ளதால் யமுனை ஆற்றின் நீர் மட்டமும் குறைந்துள்ளது. இன்று காலை 9 மணி நிலவரப்படி யமுனை ஆற்றின் நீர் மட்டம் 207.53 மீட்டராக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அபாய கட்டத்தில்தான் உள்ளது என தெரிவித்துள்ளனர். யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் டெல்லியில் பல பகுதிகளில் மார்பளவு நீர் சூழ்ந்துள்ளது. டெல்லி செங்கோட்டையிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது.
#WATCH | Yamuna river water is receding, the people of Delhi will get relief in the next 12 hours...It is a big question why all the water from Hathnikund Barrage was being released only for Delhi. Not a single drop of water was released into the canals going to UP and Haryana… pic.twitter.com/Zlb5i77Bqg
— ANI (@ANI) July 15, 2023
இந்நிலையில் டெல்லி பொதுப் பணித்துறை அமைச்சர் அதிஷி கூறுகையில், “ யமுனா நதியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் நீர் வடிந்துவிடும்” என தெரிவித்துள்ளார். தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது மேலும் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.