மேலும் அறிய

இதுதான் முதலமைச்சரை நடத்தும் விதமா? எதிர்க்கட்சிகளை எதிரிகளாக நடத்தாதீர்கள்!- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

நம் ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதியே எதிர்க் கட்சிகள் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும். அமைதிப்படுத்த வேண்டிய எதிரிகளாக நடத்தக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டெல்லி ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் 9வது நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (ஜூலை 27) நடைபெற்று வருகிறது.

நிதி ஆயோக் கூட்டத்தில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் முதல்வர்கள் பங்கேற்றுள்ள நிலையில், இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணித்தனர்.

என்ன காரணம்?

2024 பட்ஜெட்டில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் புறக்கணிப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சார்பாக குரல் எழுப்பப்பட்டது. இது "பழிவாங்கும் பட்ஜெட்" என்று எதிர்க்கட்சிகள் முன்னதாகவே நிதி ஆயோக் கூட்டப் புறக்கணிப்பை அறிவித்தன. 

எனினும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டார். தனது மாநிலத்தின் பிரச்னைகளை, குரல்களை கூட்டத்தில் எடுத்துரைக்கச் செல்கிறேன் என்று மம்தா தெரிவித்திருந்தார். 

வெளிநடப்பு

எதிர்பாராத விதமாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த மம்தா, ‘’மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று கூறினேன். நான் பேச விரும்பிய நிலையிலும் 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். தொடர்ந்து என்னைப் பேச அனுமதிக்கவில்லை. என்னுடைய மைக் ஆஃப் செய்யப்பட்டது,10- 20 நிமிடங்கள் மட்டுமே நாம் பங்கேற்றேன்’’ என தெரிவித்தார். 

இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச அனுமதிக்கப்படாததற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதியே எதிர்க் கட்சிகள்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ''இதுதான் கூட்டாட்சித் தத்துவமா? இதுதான் முதலமைச்சரை நடத்தும் விதமா?

நம் ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதியே எதிர்க் கட்சிகள் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும். அமைதிப்படுத்த வேண்டிய எதிரிகளாக நடத்தக்கூடாது. கூட்டாட்சி முறை விவாதத்தைக் கோருகிறது. அனைத்துக் குரல்களையும் மதிக்கிறது'' என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jani Master Arrest | பாலியல் வன்கொடுமை தலைமறைவான ஜானி மாஸ்டர் ! தட்டித்தூக்கிய போலீஸ்Priyanka Manimegalai Fight | ‘’பிரியங்கா  பாவம்’’மணிக்கு தான் INSECURITY’’ விஜய் டிவி Stars TWISTTrichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்புTirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget