FactCheck Covid 19 : புதிய வகை கொரோனா வைரஸ் மூளையை தாக்கும் என்பது உண்மையா? PIB விளக்கம்
புதிய வகை கொரோனா வைரஸ் மூளையை தாக்கும் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிவரும் நிலையில் PIB தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய வகை கொரோனா வைரஸ் மூளையை தாக்கும் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வரும் நிலையில் PIB தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புதிய வகை கொரோனா வைரஸ் மூளையை தாக்கும் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி போலியானது. இது போன்ற எந்த ஆய்வுகளும் இல்லை. இதை யாரும் நம்ப வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனாவால் ஏற்பட்ட மரணங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. இந்த வைரஸ் பரவத்தொடங்கிய காலம் முதல் உலக நாடுகளே அச்சத்தில் மூழ்கின. இதற்கிடையில் அவ்வப்போது கொரோனா தொற்று வைரஸ் குறித்த வதந்திகளும் பரவி மக்கள் மத்தியில் அச்சத்தினை மேலும் அதிகரிக்கச்செய்தது குறிப்பிடத்தக்கது.
புதிய வகை கொரோனா வைரஸ் மூளையை தாக்கும் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.#PIBFactCheck :
— PIB in Tamil Nadu (@pibchennai) January 3, 2023
இந்த செய்தி போலியானது. இது போன்ற எந்த ஆய்வுகளும் இல்லை. இதை யாரும் நம்ப வேண்டாம். @PMOIndia @mansukhmandviya @DrBharatippawar @MoHFW_INDIA @PIBFactCheck @PIB_India https://t.co/9y6pbo8o7c
இந்நிலையில், SARS-CoV-2 வைரஸ் மூளை உட்பட உடல் முழுவதும் பரவுகிறது மற்றும் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் நீடிக்கும், COVID-19 காரணமாக இறந்தவர்களின் பிரேதப் பரிசோதனைகளிலிருந்து திசு மாதிரிகளின் பகுப்பாய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் வந்ததாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அமெரிக்காவில் உள்ள அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) ஆராய்ச்சியாளர்கள் ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரை செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனைகளின் மாதிரிகளை பரிசோதித்ததாக கூறப்பட்டது. அதில் கொரோனா மூளையில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தகவல்கள் பரவி வந்தது.
இந்நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் மூளையை தாக்கும் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வரும் நிலையில் பிஐபி தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புதிய வகை கொரோனா வைரஸ் மூளையை தாக்கும் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி போலியானது. இது போன்ற எந்த ஆய்வுகளும் இல்லை. இதை யாரும் நம்ப வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )