(Source: ECI/ABP News/ABP Majha)
"தீபாவளிக்கு பின்னர் இந்தியர்கள் எடை கூடியுள்ளது" - காரணம் தெரியுமா? - ஆய்வில் வெளியான தகவல்
தீபாவளிக்கு பின்னர் இந்தியர்கள் எடை கூடியுள்ளது. சராசரியாக 32 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
தீபாவளிக்கு பின்னர் இந்தியர்கள் எடை கூடியுள்ளது. சராசரியாக 32 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
தீபாவளி பண்டிக்கை என்றால் புத்தாடை, இனிப்பு, பட்டாசு என்றுதான் வரிசைப்படுத்தப்படுகிறது. அதுவும் வட இந்தியாவில் இனிப்பு தான் பிரதானம். இந்தியாவின் மிகவும் ரிச்சான, சுவையான இனிப்பு வகைகள் பல வட இந்தியாவில் தான் தயாராகின்றன. நெய்யும், முந்திரியும், பாதாமும், பிஸ்தாவும், பாலும், கோவாவும் சும்மா பூந்து விளையாடும் ரக இனிப்புகள் தான் அங்கு ஏராளம். இனிப்புகளில் ரிச்னெஸுக்கு சற்றும் குறைவைப்பதில்லை இந்தியர்கள். வடக்கே அப்படியென்றால் தெற்கே அதிரசமும் லட்டும் பூந்தியும் சூயமும் அப்பமும் இன்னும் சில இனிப்புகளும் களை கட்டும். கிழக்கே ரசகுல்லா தொடங்கி மலாய் ஸ்வீட்கள் வரிசைகட்டும். மேற்கில் மும்பையிலும் குஜராத்திலும் சாதாரண நாட்களிலேயே ஸ்வீட்களுக்கும் சாட்களுக்கும் பஞ்சமிருக்காது. அப்படியென்றால் தீபாவளியை ஒட்டி சொல்லவா வேண்டும். இப்படி நாட்டின் 4 திசையிலும் மூளைமுடுக்கெல்லாம் தீபாவளி களை கட்டியது. கொரோனாவுக்குப் பின்னர் இந்த ஆண்டு தீபாவளி எல்லோருக்குமே ஸ்பெஷலாக தான் இருந்தது.
அதன் விளைவு தீபாவளிக்கு பின்னர் இந்தியர்கள் எடை கூடியுள்ளது. சராசரியாக 1.5 கிலோ வரை அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. HealthifyMe ஹெல்திஃபை மீ என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தீபாவளியின் போது அதாவது அக்டோபர் 22 முதல் 27 வரையிலான காலகட்டத்தில் இந்தியர்களின் சர்க்கரை பயன்பாடு சராசரியாக 32 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு நபரும் சராசரியாக 1.5 கிலோ எடை கூடியுள்ளனர். ஆனால் அதே வேளையில் தீபாவளிக்குப் பின்னர் நிறைய பேர் வாக்கிங், ஜிம் என உடற்பயிற்சிகளை தொடங்கியுள்ளனர் எனத் தெரிகிறது.
இது குறித்து ஹெல்திஃபைமீ நிறுவனத்தின் தலைமை பிசினஸ் அதிகாரி அஞ்சன் போஜராஜன் கூறுகையில், “இரண்டு ஆண்டுகள் கொரோனா கொடுத்த அதிர்வலைகளில் சிக்கியவர்கள் இந்த ஆண்டு தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடினர். அதனால் தாராளமாக இனிப்புகள் விதவிதமான உணவுகளை உண்டனர். 10 நாட்களில் சராசரியாக 1.5 கிலோ எடையை அதிகமாகப் பெற்றனர். மெட்ரோ நகரங்களின் வாரியாக பார்த்தால் புனேவில் 46% பேர் அதிக இனிப்பு உட்கொண்டனர், ஹைதராபாத்தில் 34 சதவீதம் பேர், பெங்களூருவில் 34 சதவீதம், சென்னையில் 33 சதவீதம் என இனிப்பு வகைகளை அதிகமாக உண்ணுதல் இருந்தது. ஆண்கள் மத்தியில் இனிப்பு உட்கொள்ளுதல் 38 சதவீதமும் பெண்கள் மத்தியில் 25 சதவீதமும் அதிகரித்திருந்தது. அதனால் ஆண்கள் சராசரியாக 1.7 கிலோ எடையும், பெண்கள் 1.28 கிலோ எடையும் கூடுதலாக பெற்றனர்” என்றார்.
இந்திய இனிப்பு வகைகளில் காஜூ கட்லி, குலாப் ஜாமூன் அதிகம் உண்ணப்பட்ட இனிப்பு வகைகளாக உள்ளது. டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புனே என பெரிய நகரங்கள் பலவறிலும் இதே போக்கு இருந்தது என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.