மேலும் அறிய

Akbar: பழுதடைந்த நீராவி இன்ஜின்.. சரிசெய்த இந்திய ரயில்வே.. கம்பீரமாய் கம்பேக் கொடுத்த அக்பர்..!

Akbar: ஹரியானாவில் 58 ஆண்டுகளாக இயங்கி வந்த நீராவி இன்ஜின் பழுதடைந்ததை இந்திய ரயில்வே மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. 

ஹரியானாவில் 58 ஆண்டுகளாக இயங்கி வந்த நீராவி இன்ஜின் பழுதடைந்ததையடுத்து, இந்திய ரயில்வே மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. 

நீராவி இன்ஜின்:

நாட்டில் பெரும்பாலான ரயில் தடங்கள் மின்மயமாக்கப்பட்டு ரயில்கள் மின்சாரத்தில் இயங்கி வருகின்றன. இந்த வசதிகள் இல்லாத மலைப்பகுதிகளில் நீராவி இன்ஜின் மூலம் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஹரியானா மாநிலம், ரெவாரி என்ற இடத்தில் அக்பர் (முகலாய பேரரசர் -Abu’l-Fath Jalal-ud-din Muhammad Akbar) என்ற  நீராவி இன்ஜின் மூலம் ரயில் ஒன்று 58 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்துள்ளது. சமீபத்தில், இந்த ரயில் பழுதடைந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய ரயில்வே துறை அதனை சரி செய்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இந்த ரயில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். பாரம்பரியம் மாறாத நீராவி இன்ஜின் மற்றும் பழமை வாய்ந்த எழில் மிகு தோற்றம் ஆகியவை இந்த ரயிலில் சிறப்புகளாக உள்ளன.

2012- ஆம் ஆண்டில் இயக்கப்பட்ட ரயில் :

டெல்லி - ராஜஸ்தானில் உள்ள ஆழ்வார் இடையே சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்கு கடந்த 2012 ஆம் ஆண்டில் இந்த நீராவி இன்ஜின் ரயில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு வடக்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள அமிர்தசரஸ் பணிமனையில் முழு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியிலிருந்து சுற்றுலா பேக்கேஜ் திட்டத்தின் கீழ் இந்த ரயில் இயங்கி வந்தது. குறிப்பாக சரிஸ்கா தேசிய பூங்காவுக்கு செல்ல இந்த ரயில் உதவியாக இருந்தாக சொல்லப்படுகிறது.

அமிர்தசரஸ் பணிமனை :

அமிர்தரஸ் பகுதியில் உள்ள ரயில் பணிமனையில் மட்டுமே நாட்டிலேயே நீராவி இன்ஜின் கொண்ட ரயில்களை பழுது பார்க்கும் வசதி உள்ளது. அங்கு மட்டுமே இதுபோன்ற பாரம்பரியம் மிகுந்த ரயில்களை பழுது பார்க்கும் வசதிகள் இருக்கின்றன. 

அக்பர் நீராவி இன்ஜின் ரயில் கடந்த 1962ஆம் ஆண்டில் முதன் முதலாக சேவையை தொடங்கியது. இந்தி திரைப்பட உலகில் எண்ணற்ற படங்களின் படப்பிடிப்பு இந்த ரயிலில் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் சல்மான் கான் நடித்த சுல்தான் என்னும் திரைப்படம் இதில் படம்பிடிக்கப்பட்டது. அப்போது ரயிலை அவர் துரத்தி பிடிப்பதை போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

தடக..தடக்.. என்ற இதன் ஒலியும், நீராவி கலந்த கரும்புகையும் நம் மனதில் பழங்கால ரயில் பயண அனுபவத்தை ஏற்படுத்துவதாக அமையும். ரயில் மலைப்பகுதியில் செல்லும் போது, பசுமை போர்த்திய இயற்கை அழகுக்கு மத்தியில் செல்கின்ற பயண அனுபவம் மனதில் குதூகலத்தை ஏற்படுத்துவதாக அமையும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget