மேலும் அறிய

கதி கலங்க வைக்கும் டானா புயல்.. களத்தில் இறங்கிய கடற்படை.. அத்தியாவசிய பொருள்கள் ரெடி!

டானா புயலையொட்டி மேற்குவங்கம், ஒடிசாவில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கவும், உணவுப் பொருட்கள் மற்றும் இதரப் பொருட்களை வழங்கவும் கடற்படை தயாராக உள்ளது.

ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களின் கடற்கரையில் டானா புயல் ஏற்படுத்தக் கூடிய கடுமையான தாக்கத்தை சமாளிக்க, இந்திய கடற்படை மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.

கிழக்கு கடற்படை தலைமையகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள கடற்படை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, விரிவான பேரிடர் மீட்பு  செயல்முறையை வகுத்துள்ளது.

களத்தில் கடற்படை:

மாநில நிர்வாகங்கள் கோரினால், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கவும், உணவுப் பொருட்கள் மற்றும் இதரப் பொருட்களை வழங்கவும் கடற்படை தயாராக உள்ளது. கடற்படை மருத்துவமனையான ஐ.என்.எச்.எஸ் கல்யாணி மற்றும் இதர பிரிவுகளுடன் கடற்படை நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.

இந்த முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களுக்கு அத்தியாவசிய ஆடைகள், குடிநீர், உணவு, மருந்துகள் மற்றும் அவசர நிவாரணப் பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் சாலை வழியாக அனுப்பி வைக்கப்படும்.

அத்தியாவசிய பொருள்கள் ரெடி:

மேலும், தேவைப்பட்டால் ஒருங்கிணைந்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ  வெள்ள நிவாரண மற்றும் நீச்சல் வீரர் குழுக்கள் அனுப்பப்படும். கடலில் மேற்கொள்ளப்படும் நிவாரண முயற்சிகளுக்கு உதவியாக, கிழக்கு கடற்படையின் இரண்டு கப்பல்களில் பொருட்கள், மீட்பு மற்றும் டைவிங் குழுக்களுடன் தயாராக உள்ளன.

இந்தியக் கடற்படை தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், அதிக எச்சரிக்கையுடனும் உள்ளது. சிவில் அதிகாரிகளுக்கும் டானா  சூறாவளியால் பாதிக்கப்படும் மக்களுக்கும் தனது உதவியை வழங்க கடற்படை தயாராக உள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடலில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறைகளும் முடுக்கிவிடப்பட்டு, நிலைமையை கண்காணித்து வருகின்றன.

தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) மேற்கு வங்கத்தில் 14 அணிகளையும், ஒடிசாவில் 11 அணிகளையும் நிறுத்துவதற்காக தயார் நிலையில் வைத்துள்ளது. ராணுவம், கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது;  இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது; இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
Embed widget