Cheetah Helicopter Crash: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 2 பைலட்டுகள் உயிரிழந்த சோகம்...!
அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளனத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
Cheetah Helicopter Crash: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளனத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்து
அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருணாசல பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. காலை 9.15 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த இந்த ஹெலிகாப்டரில் இரண்டு பைலட்டுகள் இருந்துள்ளனர். இந்த ஹெலிகாப்டர் காலை 9 மணிக்கு சங்கே என்ற பகுதியில் இருந்து புறப்பட்டு அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள மிஸ்ஸமாரிக்கு சென்று கொண்டிருந்தது.
2 பேர் உயிரிழப்பு
அப்போது அருணாச்சல பிரதேசத்தின் மண்டாலா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காலை 9.15 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனை அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறிது நேரம் கழித்து 2 பேரின் சடலங்களை மீட்டனர். அதில் லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் ஏ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
#LtGenRPKalita #ArmyCdrEC & All Ranks offer tribute to the supreme sacrifice of Lt Col VVB Reddy & Maj Jayanth A, in the line of duty at Mandala, #ArunachalPradesh while carrying out operational flying of Cheetah Helicopter. #IndianArmy stands firm with the bereaved families pic.twitter.com/XimeZQ0pan
— EasternCommand_IA (@easterncomd) March 16, 2023
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "அருணாச்சல பிரதேசத்தில் திராங் மலைப்பகுதியில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த பைலட்டுகள் இருவரின் சடலங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விபத்துக்கான உரிய காரணம் இன்னும் அறியப்படவில்லை. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக" தெரிவித்தனர்.
மேலும் படிக்க