Airlines : கடந்த ஆண்டில் மட்டும் 63 பேருக்கு விமானத்தில் பயணிக்க தடை... இதுதான் காரணமா...? - மத்திய அரசு தகவல்...!
கடந்த ஆண்டில் மட்டும் விமானத்தில் பயணிக்க 63 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Airlines : கடந்த ஆண்டில் மட்டும் விமானத்தில் பயணிக்க 63 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடர்
நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது. இரண்டு கட்டங்களாக நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதி கூட்டத்தொடர் மார்ச் 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் நாளில் நிகழ்வுகள் தொடங்கிய உடனே லண்டனில், இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம் பற்றி ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். மேலும் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர் அமளிக்கு வழிவகுத்ததால் தொடக்கப்பட்ட நாளில் இருந்து நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
63 பேருக்கு தடை
இதற்கிடையில் பல்வேறு விவாதங்களும் நடைபெற்றன. இன்றைய அவையில், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது, ” கடந்த ஆண்டில் மட்டும் விமானத்தில் பயணிக்க 63 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகளை மீறியதால் 63 பேர் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுபோன்றே இந்த ஆண்டில் விமான நிலையங்களில் தொடர் சர்ச்சை அரங்கேறி வருகிறது. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்ட நபர் சிறைக்கு அனுப்பப்பட்டார். மேலும், விமானத்தில் புகைப்பிடிப்பது, தகராறில் ஈடுபடுவது போன்ற பல சம்பவங்கள் அரங்கேறின.
குற்றச்சாட்டு
இதற்கிடையில் நேற்றைய அவையில், விமான நிறுவனங்கள் பொய்யான தகவல்களை கூறி அதிக கட்டணம் வசூலிப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இருக்கைகள் பெரும்பான்மை ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டதாகவும், குறைந்த அளவுக்கான இருக்கைகள் காலியாக உள்ளதாக கூறி விமான நிறுவனங்கள் அதிக விலையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக நாடாளுமன்ற நிலைக்குழு குற்றச்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

