Vice President Election 2022: முக்கிய அறிவிப்பு.. வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான மனு தாக்கல் ஜூலை 5ஆம் தேதி தொடங்கும் என்றும், வேட்பு மனு தாக்கலுக்கு ஜூலை 19-ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
Election to the Office of the Vice President to be held on 6th August 2022.
— ANI (@ANI) June 29, 2022
வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி
மேலும், குடியரசு துணைத் தேர்தலுக்கான மனு தாக்கல் ஜூலை 5ஆம் தேதி தொடங்கும் என்றும், வேட்பு மனு தாக்கலுக்கு ஜூலை 19ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஜூலை 20ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நடைபெறும் என்றும் வேட்பு மனுவை திரும்பப் பெற ஜூலை 22ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Election to the Office of the Vice-President of India, 2022 (16th Vice-Presidential Election) - poll & counting date - 6th August 2022 @PIB_India @airnewsalerts @DDNewslive https://t.co/JfEP8oXVIR
— Spokesperson ECI (@SpokespersonECI) June 29, 2022
மேலும், ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், வாக்குப் பதிவு முடிந்தவுடன் அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 18 குடியரசுத் தலைவர் தேர்தல்
முன்னதாக குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்றும், தொடர்ந்து தேர்தல் முடிவுகள் ஜூலை 21ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 15 ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் இன்று ஜூன் 29 ஆம் தேதி ஆகும். இத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பாக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்