மேலும் அறிய

மதுபான ஏற்றுமதியை ஊக்குவிக்க செம்ம பிளான்.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் மேக் இன் இந்தியா!

அடுத்த சில ஆண்டுகளில் 1 பில்லியன் டாலர் ஏற்றுமதி வருவாயை இலக்காகக் கொண்டு, இந்திய மது மற்றும் மது அல்லாத பானங்களை உலகளவில் ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்திய சாராய வகைகளுக்கு உலகளவில் அதிக வரவேற்பு காணப்படுவது, வளர்ச்சிக்கான வாய்ப்பை வழங்குகிறது. வேளாண் மற்றும் பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), அடுத்த சில ஆண்டுகளில் 1 பில்லியன் டாலர் ஏற்றுமதி வருவாயை இலக்காகக் கொண்டு, இந்திய மது மற்றும் மது அல்லாத பானங்களை உலகளவில் ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது.

மதுபான ஏற்றுமதியை ஊக்குவிக்க செம்ம பிளான்: 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக அபீடா (APEDA) பெரிய நாடுகளுக்கு இந்திய மதுபானங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. மதுபான ஏற்றுமதியில் இந்தியா தற்போது உலக அளவில் 40-வது இடத்தில் உள்ளது.

இந்திய மதுபானங்களுக்கு இதுவரை இல்லாத நடவடிக்கையாக, கோடவன் சிங்கிள் மால்ட் விஸ்கி, இந்தியாவின் ராஜஸ்தானில் தயாரிக்கப்பட்ட கைவினைஞர் சிங்கிள் மால்ட் விஸ்கியாக இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அடுத்த கட்டத்திற்கு செல்லும் மேக் இன் இந்தியா: கோடவனின் முதல் தொகுதியை மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ராஜேஷ் அகர்வால், டியாஜியோ பிஎல்சியின் தலைமை நிர்வாகி டெப்ரா க்ரூ, அபீடா தலைவர் அபிஷேக் தேவ், டியாஜியோ இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹினா நாகராஜன் மற்றும் பிற மூத்த பிரதிநிதிகள் கூட்டாக கொடியசைத்து இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தனர்.

கோடவன் சிங்கிள் மால்ட் விஸ்கி, மார்ச் 2024-ல் APEDAஇன் கீழ் லண்டனில் நடந்த சர்வதேச உணவு மற்றும் பானங்கள் திருவிழாவில் (IFE) பங்கேற்று கோடவனின் விளம்பரங்களை மேற்கொண்டது. இது இங்கிலாந்தில் கோடவனை அறிமுகப்படுத்துவதற்கும், அந்நாட்டிற்கு ஏற்றுமதியைத் தொடங்குவதற்கும் ஒரு முன்னோடியாக அமைந்தது.

இந்த முயற்சி ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் பகுதி விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடவன் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஆறு வரிசை பார்லி, உள்நாட்டில் கொள்முதல் செய்யப்படுகிறது. இது உள்ளூர் விவசாயிகளின்  வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது.

இதையும் படிக்க: CM Stalin Cycle Video: ப்ரோ ..! நாம எப்ப சென்னையில் சைக்கிள் ஓட்டலாம்..!முதல்வர் ஸ்டாலினிடம் கேட்ட ராகுல்.!

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
SSLC Pass Mark: பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Fortuner Rival SUV: குவாலிட்டிக்கு பெயர் போன ஃபோல்க்ஸ்வாகன் - ஃபயரா வரும் டெய்ரான், எதிரி யார் தெரியுமா?
Fortuner Rival SUV: குவாலிட்டிக்கு பெயர் போன ஃபோல்க்ஸ்வாகன் - ஃபயரா வரும் டெய்ரான், எதிரி யார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vikravandi |“எங்களுக்கே வழிவிட மாட்டியா” TOLGATE-யை நொறுக்கிய விசிகவினர் விக்கிரவாண்டியில் பரபரப்பு
Kundrathur Abirami Audio | குழந்தைகளை கொன்ற அபிராமி “பயமே இல்லையா உனக்கு” வெளியான பகீர் ஆடியோ
Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?
Vice President Jagdeep Dhankhar | அழுத்தம் கொடுத்த பாஜக? ஜெகதீப் தன்கர் ராஜினாமா!உண்மை பின்னணி என்ன?
ADMK BJP Alliance | கூட்டணி கட்சிகள் போர்க்கொடி.. இபிஎஸ்-க்கு நெருக்கடி! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
SSLC Pass Mark: பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Fortuner Rival SUV: குவாலிட்டிக்கு பெயர் போன ஃபோல்க்ஸ்வாகன் - ஃபயரா வரும் டெய்ரான், எதிரி யார் தெரியுமா?
Fortuner Rival SUV: குவாலிட்டிக்கு பெயர் போன ஃபோல்க்ஸ்வாகன் - ஃபயரா வரும் டெய்ரான், எதிரி யார் தெரியுமா?
ரூ.1,050 கோடிக்கு கிரிக்கெட் டீம் வாங்கிய கலாநிதி மாறன்; எங்கு, எந்த அணி தெரியுமா.?
ரூ.1,050 கோடிக்கு கிரிக்கெட் டீம் வாங்கிய கலாநிதி மாறன்; எங்கு, எந்த அணி தெரியுமா.?
Top 10 News Headlines: தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
Embed widget