இந்திய விண்வெளி துறையின் வளர்ச்சியும் சாதனைகளும்..2024 ரவுண்டப்!
India’s Space achievements: இந்திய விண்வெளி துறையில் 2024-ல் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றி காணலாம்.
விண்வெளி துறையில் இந்தியாவிற்கு 2024-ம் ஆண்டில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் அடங்கியது. தொழில்நுட்ப வளர்ச்சி, இஸ்ரோவின் சாதனைகளை உலக அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியது.
next generational launch vehicle (NGLV), புதிய ராக்கெட் என பல்வேறு முன்னேற்றங்களை கண்டுள்ளது. அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
எக்ஸ்போ சாட் ( XPOSAT):
கருத்துளை, நியூட்ரான் விண்மீன்கள் தொடர்பான வானியல் ஆய்வுக்காக எக்ஸ்போசாட் அதிநவீன செயற்கைக் கோள், பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட் மூலம் ஜனவரி,2-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. எக்ஸ்ரே மூலங்களின் தற்காலிக நிலை, ஸ்பெக்ட்ரம் போன்ற அறிவியல் ஆய்வுகளையும், விண்வெளியில் உள்ள தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான 'நெபுலா’ ஆகியவற்றை பற்றி விரிவாக ஆராய ஏதுவாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
PSLV-C58/XPoSat Mission:
— ISRO (@isro) January 1, 2024
The PS4 stage is successfully brought down to a 350 km orbit.
Here are the PSLV-C58 tracking images pic.twitter.com/KXDVA2UnpX
விண்வெளி மற்றும் பூமியின் மேற்பரப்பில் உள்ள புறஊதா கதிர்கள் மற்றும் கேரளாவில் வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்ற நிகழ்வுகளில் அவற்றின் தாக்கத்தை ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெண்கள் மேற்பார்வையில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் என்ற பெருமை இந்த வெசாட் செயற்கைக்கோளுக்கே சேரும். இத்துடன் 10 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களும் இந்த பி.எஸ்.எல்.வி சி 58 ராக்கெட்டில் இருந்தது.
ஆதித்யா எல்1 (Aditya-L1):
சூரியனை ஆராயும் நோக்கில் விண்ணிற்கு செலுத்தப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின், ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக எல்1 எனப்படும் லெக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டது இந்தியாவின் விண்வெளி துறையில் மிகப்பெரிய மைல்கல். சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ஆதித்யா எல்-1 விண்கலம் 2023 செப்டம்பர் 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள லெக்ராஞ்சியன் புள்ளி 1-இல் சூரியனை நோக்கி இந்த விண்கலம் தனது பயணத்தை தொடங்கியது.
𝐈𝐧𝐝𝐢𝐚, 𝐈 𝐝𝐢𝐝 𝐢𝐭. 𝐈 𝐡𝐚𝐯𝐞 𝐫𝐞𝐚𝐜𝐡𝐞𝐝 𝐭𝐨 𝐦𝐲 𝐝𝐞𝐬𝐭𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧!
— ISRO InSight (@ISROSight) January 6, 2024
Aditya-L1 has successfully entered the Halo orbit around the L1 point.#ISRO #AdityaL1Mission #AdityaL1 pic.twitter.com/6gwgz7XZQx
செயற்கைகோளில், சூரியனை பற்றி ஆய்வு செய்ய விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன.
INSAT-3DS:
வானிலை மாற்றத்தை துல்லியமாக ஆராய்ச்சி செய்யும் நோக்கத்துடன் இஸ்ரோவின் இன்சாட் 3DS செய்ற்கைக்கோள் உடன் ஜி.எஸ்.எல்.வி எஃப்-14 ராக்கெட் 2024,பிப்ரவரி மாதம் விண்ணில் பாய்ந்தது. ஜிஎஸ்எல்வி F14, 420 டன் எடை கொண்டது. INSAT-3DS -இது வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் எச்சரிக்கைக்காக மேம்படுத்தப்பட்ட வானிலை ஆய்வுகள் மற்றும் நிலம் மற்றும் கடல் பரப்புகளை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோள் தற்போது செயல்படும் இன்சாட்-3டி மற்றும் இன்சாட்-3டிஆர் செயற்கைக்கோள்களுடன் வானிலை ஆய்வு சேவைகள் அதிகரிக்கும் நோக்கில் இது விண்ணில் செலுத்தப்பட்டது.
Pushpak RLV LEX-03:
விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை சுமந்து சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் புஷ்பக் ஏவுகலன் சோதனை மூன்றாவது முறையாக ஜூன்,2024ல் வெற்றி அடைந்தது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய புஷ்பக் ஏவுகலனின் (Reusable Launch Vehicle) தரையிறங்கும் பரிசோதனை வெற்றி பெற்றது இஸ்ரோவின் சாதனை.
#ISRO has successfully completed #RLV LEX-03 - the last milestone for RLV before its Reentry Experiment!! 🔥
— ISRO Spaceflight (@ISROSpaceflight) June 23, 2024
It was dropped from 4.5 km alt. & glided 4.5 km downrange & 500m crossrange to reach the runway & was ONLY 11 cm off from the runway's centerline when it stopped! 🤯 pic.twitter.com/qVaQ2bT5i3
இறக்கைகள் கொண்ட ஆர்எல்வி வாகனம், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சினூக் ஹெலிகாப்டரில் இருந்து 4.5 கிமீ உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றி அடைந்தது.
PSLV-C59 / PROBA-3 Mission
— ISRO (@isro) December 5, 2024
✨ Here's a glimpse of the spectacular liftoff!
#PSLVC59 #ISRO #NSIL #PROBA3 pic.twitter.com/qD3yOd1hZE
PSLV-C59 / PROBA-3:
சூரியனின் வளிமண்டலம் குறித்து ஆராய்ச்சி செய்யும் நோக்கில் டிசம்பர்,2024 புரோபா-3 செய்ற்கைகோள் உடன் PSLV-C59 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. சூரிய வளிமண்டலத்தில் நிலவும் வெப்பம் தொடர்பாக கூடுதலாக ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த செயற்கைக்கோளானது, நீள்வட்டப்பாதையில் பூமியை சுற்றிவரும் பூமியிலிருந்து குறைந்தபட்சமாக சுமார் 600 கி.மீ தொலைவிலும், அதிகபட்சமாக 60,530 கி.மீ தொலைவிலும் சுற்றி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கால திட்டங்கள்:
ககன்யான் திட்டம்:
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இந்தியாவின் கனவு. முதன்முறையாக இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு செல்வது மிகப் பெரிய சாதனை. மனித விண்வெளிப் பயணத் திட்டம் ககன்யான் 2026 -ற்குள் விண்ணில் செலுத்தப்படும்.
சந்திராயன் - 4: திட்டம்
நிலவுக்குச் சென்று பூமிக்கு திரும்பும் பணி சந்திரயான்-4 2028-லும் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-3ல் இருந்த ரோவர் எடை வெறும் 27 கிலோ மட்டுமே. ஆனால் இந்த திட்டத்தில் 350 கிலோ எடையுள்ள ரோவரை சுமந்து செல்லும். சந்திராயன் 4- இந்த சந்திரயான்-4 விண்கலம், நிலவில் தரையிறங்கி பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பும். இதை 2040-ம் ஆண்டுக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. 2035-ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையம் (பாரதிய அந்தரிக்ஷ் நிலையம்), 2040-க்குள் சந்திரனில் இந்தியா அமிர்த கால இந்திய விண்வெளித் திட்டம் ஆகியவற்றுக்கான விரிவான தொலைநோக்குப் பார்வை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ- ஜப்பான் விண்வெளி நிறுவனமான ஜாக்ஸா உடன் இணைந்து மேற்கொள்ளும் திட்டம் சந்திரயான்-5 திட்டமாக இருக்கும். இதற்கு லூபெக்ஸ் அல்லது Lunar Polar Exploration எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.