Djibouti Base: ஹம்பாந்தோட்டையை காட்டிலும் இதுதாங்க ஆபத்து..இந்தியாவுக்கு தலைவலியை தரும் சீனாவின் புதிய கடற்படை தளம்..
கடற்படையை சீனா பலப்படுத்தி வருவது பிராந்திய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என புவிசார் அரசியல் நிபுணர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
மாறி வரும் உலக சூழலுக்கு மத்தியில் அமெரிக்காவுக்கு பெரும் சவால் விடுத்து வரும் சீனா, அனைத்து வகைகளிலும் தன்னை தயார்படுத்தி வருகிறது. பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, உக்ரைன் விவகாரத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரஷியாவை கண்டு, அதிலிருந்து பாடம் கற்று கொண்டுள்ளது. அதன் விளைவாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷியா மீது அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இன்னொரு சுவாரஸ்யம் இதோ இருக்கு:
Karuththarajapalayam: கான்க்ரீட் வீடு வேணாம், உசுறுதான் முக்கியம்.. படிகட்டுக்கு நோ, தச்சர்களே இல்லாத கருத்தராஜபாளையம் - சாமி குத்தம்னு பதறும் மக்கள்
இது, தனக்கு நேர்ந்திடாதவாறு தடுத்திடும் நோக்கில் வெளிநாடுகளில் கடற்படை தளங்களை அமைக்க சீனா திட்டமிட்டு வருகிறது. தற்போதைக்கு, சீனா ராணுவத்திற்கு சொந்தமாக ஒரே கடற்படை தளம்தான் வெளிநாட்டில் உள்ளது. ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில்தான் அந்த கடற்படை தளம் அமைந்துள்ளது.
பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் சீனா:
கடற்படையை சீனா பலப்படுத்தி வருவது பிராந்திய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என புவிசார் அரசியல் நிபுணர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். முழுவதுமாக தயார் பணியில் வைக்கப்பட்டுள்ள ஜிபூட்டி கடற்படை தளத்தின் சாட்டிலைட் புகைப்படங்கள் கடந்தாண்டு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீனப் போர்க்கப்பல்களுக்கு உதவிடும் வகையில் இந்த கடற்படை தளம் தயார் செய்யப்பட்டுள்ளது. மலாக்கா ஜலசந்தி அருகே இந்த கடற்படை தளம் அமைந்துள்ளதால் இந்தியாவுக்கு சிக்கலை உண்டாக்கும் வகையில் இருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏன் என்றால், இந்தியப் பெருங்கடலையும் தென் சீனக் கடலையும் இணைக்கும் முக்கியமான சோதனைச் சாவடியாக மலாக்கா ஜலசந்தி உள்ளது. இது உலகின் பரபரப்பான கப்பல் பாதைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் உலக வர்த்தகத்தில் 25% இதன் வழியாக செல்கிறது.
சாட்டிலைட் புகைப்படங்களால் அதிர்ச்சி:
தற்போது வெளியாகியுள்ள சாட்டிலைட் புகைப்படங்களில், கடற்படை தளத்தை சுற்றி புதிய கட்டிடங்கள், பெரிய தூண் அமைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
350 க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களுடன், சீன கடற்படை உலகின் மிகப்பெரியதாக உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை 460 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, சீனாவுக்கு சொந்தமாக குறைந்தது 85 ரோந்துக் கப்பல்கள் உள்ளன. அதில், பல எதிரி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை தாங்கி செல்லும் திறனை கொண்டுள்ளது.
ஏற்கனவே, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா, தன்னுடைய கடற்படை தளமாக மாற்ற அதிக வாய்ப்பிருக்கிறது என அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டிருந்தது. கடந்த 2010ஆம் ஆண்டுதான், இந்த துறைமுகம் திறக்கப்பட்டுள்ளது. சீனாவின் பொதுத்துறை வங்கியான சீன எக்ஸிம் வங்கி அளித்த 306.7 மில்லியன் அமெரிக்க டாலர் கடனில்தான் இந்த துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சீன அரசின் நேரடி கட்டுப்பாட்டில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளது.
அளிக்கப்பட்ட கடனை இலங்கை அரசு திருப்பி அளிக்க முடியாத காரணத்தால், கடந்த 2017ஆம் ஆண்டு, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா நிறுவனம் ஒன்று, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது.