மேலும் அறிய

Covid-19 Cases in India: இந்தியாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 4 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் கொரோனா பாதிப்பால் 4,187 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றனது.

மேலும், தொற்று பரலவை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Covid-19 Cases in India: இந்தியாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 4 ஆயிரத்தை தாண்டியது

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து  ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 4.12 லட்சம், நேற்று 4.14  லட்சமாக இருந்த பாதிப்பு இன்று  4.10 லட்சமாக குறைந்துள்ளது. ஆனால், ஒருநாள் உயிரிழப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில்  4 லட்சத்து  ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 14 லட்சத்து 91 ஆயிரத்து 598-இல் இருந்து 2 கோடியே 18 லட்சத்து 92 ஆயிரத்து 676- ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 ஆயிரத்து  187 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 83-ல் இருந்து 2 லட்சத்து 38 ஆயிரத்து 270-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 18 ஆயிரத்து 609 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 76 லட்சத்து 12 ஆயிரத்து 351-இல் இருந்து ஒரு கோடியே 79 லட்சத்து 30 ஆயிரத்து 960 ஆக உள்ளது.

India reports 4,01,078 new #COVID19 cases, 3,18,609 discharges, and 4,187 deaths in the last 24 hours, as per Union Health Ministry

Total cases: 2,18,92,676
Total discharges: 1,79,30,960
Death toll: 2,38,270
Active cases: 37,23,446

Total vaccination: 16,73,46,544 pic.twitter.com/QRK5bnwMkO
— ANI (@ANI) May 8, 2021

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 81.77 சதவீதம் மற்றும் உயிரிழப்பு விகிதம் 1.10 சதவிகிதமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 37 லட்சத்து 23 ஆயிரத்து 446-ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 78 ஆயிரத்து 282 பேர் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 16 கோடியே 73 லட்சத்து 46 ஆயிரத்து 544 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
Embed widget