புதுச்சேரியில் 17 அரசுத்துறைகளில் 1,104 கோடி பாக்கி - தணிக்கைத்துறை அறிக்கை தகவல்
புதுச்சேரியில் 17 அரசுத் துறைகளில் வசூல் செய்யப்பட வேண்டிய பாக்கி தொகை ரூ.1,104 கோடியாகவுள்ளது என்று முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் அறிக்கை
புதுச்சேரியில் 17 அரசுத் துறைகளில் வசூல் செய்யப்பட வேண்டிய பாக்கி தொகை 1,104 கோடி நிலுவையில் உள்ளதாக இந்திய தணிக்கை அறிக்கை தாக்கல் செய்துள்ளது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள புதுச்சேரி முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ், இந்திய தணிக்கை அறிக்கையில் அரசின் 3 முக்கிய குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. புதுச்சேரி அரசு சட்டப்படி வர வேண்டிய சொந்த வருவாயைப் பெறாமல் உள்ளது. 17 அரசுத் துறைகளில் சுமார் 1,104 கோடி நிலுவை உள்ளது. குறிப்பாக மின் துறையில் அதிக அளவாக 709 கோடியும், வணிக வரித் துறையில் 274 கோடியும், கலால் துறையில் 67.4 கோடியும், பொது பணித்துறையில் 41.5 கோடியும் நிலுவை உள்ளது. வணிக வரியை இறுதி செய்யாததால் வரியை வசூலிக்க முடியவில்லை.
kanchipuram: கிராமத்திற்கு திடீரென விரைந்த மருத்துவர்கள்..நடந்தது என்ன?
வரி கட்டாமல் பலர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதால் வருவாய் கிடைக்கவில்லை. இதை சரி செய்திருந்தால் புதுச்சேரி அரசின் சொந்த வருவாய் 1,500 கோடி உயர்ந்திருக்கும். இதை வசூலித்திருந்தால் நிதி நிலை மேம்பட்டிருக்கும். உபரி பட்ஜெட்டைக் கொடுத்திருக்க முடியும். இந்த வருவாய் இழப்பினால் தான் சமூக நலன் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு செயலர்கள் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
SA Chandrasekar Speech: எனக்கும் விஜய்க்கும் சண்டை தான்..மீண்டும் சொன்ன SAC
அரசு செலவு செய்யும் முறையிலும் குறைபாடுகள் உள்ளன. 74 திட்டங்களுக்கு 334 கோடி செலவிட மதிப்பிட்டு 151 கோடி செலவிட்டு 13 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடியவில்லை. மக்கள் வரிப்பணம் வீணாவதற்கு யார் பொறுப்பு, அரசு செலவழித்த 153 கோடி எங்கே சென்றது, அரசு கடன் வாங்கும் முறையும் சீராக இல்லை. 71 பொதுத் துறைகளில் 53 துறைகள் கணக்கைச் சமர்ப்பிக்கவில்லை. நிதி இல்லாத சூழலில் மீண்டும் கடன் வாங்குவது நல்ல நிதி நடைமுறை அல்ல.
தணிக்கை அறிக்கை பொது மக்களின் பணம் தவறாக கையாளப்படுகிறது என்ற உண்மையை உணர்த்துகிறது. அரசு இந்த அறிக்கையை நன்கு ஆராய்ந்து எதிர்காலத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரிக்கு ஏற்பட்ட இழப்பை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Vellur Ibrahim Speech: ருத்ரதாண்டவத்தை கிறிஸ்துவர்கள் கொண்டாடுவாங்க- வேலூர் இப்ராஹிம்