(Source: ECI/ABP News/ABP Majha)
Ideas of India 2023: 'ஐடியாஸ் ஆஃப் இந்தியா' நாளைய இந்தியாவை வரையறுப்பதில் பங்கு வகிக்கும் - ஏபிபி சி.இ.ஓ. அவினாஷ் பாண்டே பெருமிதம்
ஐடியாஸ் ஆஃப் இந்தியா மாநாடு புதிய இந்தியாவை வரையறுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று ஏபிபி சி.இ.ஓ. அவினாஷ் பாண்டே பேசியுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் தலைசிறந்த ஊடக நிறுவனமான ஏபிபி குழுமத்தின் சார்பில் ஏபிபி ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை:
இந்த நிலையில், இந்த விழாவில் பங்கேற்றுள்ள ஏபிபி சி.இ.ஓ. அவினாஷ் பாண்டே பேசியதாவது, “ இன்று நாம் பாறையின் விளிம்பில் இருப்பது போல இருக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உலகையே தலைகீழாக மாற்றியுள்ளது. ஆற்றல் மற்றும் பணவீக்கத்தில் நெருக்கடியை ஏற்பட்டுள்ளது. காலநிலை பேரழிவு, பருவமில்லாத வெள்ளம் இயற்கைக்கு மாறான வறட்சியை ஏற்படுத்துகிறது. நகரங்கள் மூழ்குகின்றன. சில நகரங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
நீண்ட காலமாக உள்ள கோவிட் மக்கள் மத்தியில் வாழ்க்கை, வேலை, அன்பு ஆகியவற்றில் உளவியல் ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏபிபி இந்தியாவின் கருத்துக்களின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். ஜனநாயகத்தை நாங்கள் நம்புகிறோம். இந்தியாவின் மக்கள்தொகை, ஜனநாயகம், பன்முகத்தன்மை, ஆற்றல் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள். நாங்கள் சுயபரிசோதனை மற்றும் செயலில் நம்பிக்கை கொண்டவர்கள். தர்மத்தின் லட்சியமே அனைத்தையும் விட மேலானது என்று நாங்கள் நம்புகிறோம்.
புதிய இந்தியா:
இந்தியாவின் பல எண்ணங்கள் அடையாளங்கள் மற்றும் அவதாரங்களை நாங்கள் நம்புகிறோம். அடுத்த 2 நாட்களில் பல அற்புதமான மனிதர்களிடம் இருந்து இதைப்பற்றி நீங்கள் அதிகம் கேட்பீர்கள். கடந்தாண்டில் நடந்த ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியாவின் முதல் உச்சிமாநாட்டை எங்கள் நெட்வொர்க் முழுவதும் எத்தனை பேர் பார்த்தார்கள் என்பதன் அடிப்படை மட்டுமின்றி, ஒரு அறிவார்ந்த பரிமாற்றமாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஏபிபி ஐடியாஸ் ஆஃப் இந்தியா நிகழ்வு ஒரு உச்சி மாநாடாக மட்டுமின்றி, இந்தியாவின் பண்பாக இருக்கும் பன்மைத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் விரிவுபடுத்தும் தளம். ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சிமாநாடு 2023 நாளைய இந்தியாவை வரையறுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த உச்சிமாநாட்டை உள்நோக்கி பார்த்தால் புதிய இந்தியாவை உருவாக்குவதில் பங்கு வகிக்கும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க: ABP Network Ideas Of India: 'ஐடியாஸ் ஆஃப் இந்தியா' உச்சி மாநாட்டை நேரலையாக காண்பது எப்படி?
மேலும் படிக்க: Ideas of India Summit 2023: எதிர்காலத்திற்கான மிகப்பெரிய நம்பிக்கை: இந்தியாவுக்கு லிஸ் டிரஸ் பாராட்டு..!