Crime : கொடூரமாக உயிரிழந்த 8 மாத கர்ப்பிணி... வஞ்சம் வைத்து கொன்ற உறவினர்.. திடுக்கிடும் கோர சம்பவம்
ஹைதராபாத்தில் உள்ள கோண்டாபூரில் 32 வயது கர்ப்பிணிப் பெண் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
ஹைதராபாத்தில் உள்ள கோண்டாபூரில் 32 வயது கர்ப்பிணிப் பெண் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஒரு வாரத்திற்கு முன்பு நடைபெற்ற இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கச்சிபௌலி போலீசார் அவரது உறவினரான ஆந்திராவைச் சேர்ந்த 35 வயது நபரை கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் கவுரு ஸ்ரீராமா கிருஷ்ணா என்பது தெரிய வந்துள்ளது. முன்னதாக, இவர் மீது இவரது மனைவி, குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக போலீசில் புகார் செய்துள்ளார்.
மனைவியை தூண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க செய்ததால் கர்ப்பிணி பெண் மீது கிருஷ்ணா பழிவாங்கும் நோக்கத்தில் இருந்துள்ளார்.
ஸ்ரீராமா செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் நர்சாபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீராமா என்பவர் மீது சாந்தாநகரில் அவரது மனைவி லட்சுமி பிரசன்னா கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அளித்த வரதட்சணை கொடுமைப் புகாருக்கு சாப்ட்வேர் இன்ஜினியரான வாசுசெட்டி வெங்கடராம கிருஷ்ணாவும், அவரது மனைவி வாசுசெட்டி ஸ்ரவந்தியும்தான் காரணம் என நம்பியதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை, ஸ்ரீராமா பழிவாங்குவதற்காக வெங்கடராமனின் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் எட்டு மாத கர்ப்பிணியான ஸ்ரவந்தி வீட்டில் தனியாக இருப்பதைக் கண்டுள்ளார். தான் கொண்டு வந்த அரிவாளால் ஸ்ரவந்தியின் தலையில் ஸ்ரீராமா சரமாரியாக தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார். ஸ்ரவந்தி, தரையில் சரிந்து விழுந்துள்ளார்.
அப்போது வெங்கடராமன் அவர்களின் மகளை பள்ளியில் இருந்து அழைத்து வர சென்றிருந்தார். 2020 ஆம் ஆண்டில், வெங்கடராமன் தனது உறவினரான பிரசன்னாவை 2020 இல் ஸ்ரீராமாவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால், அவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக பிரசன்னா கடந்த ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
சம்பவத்தை விவரித்த கச்சிபௌலி காவல் ஆய்வாளர் ஜி சுரேஷ், "கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, வரதட்சணை கேட்டு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதால், வெங்கடராமன் மற்றும் குடும்பத்தினர் ஸ்ரீராமாவை சந்தித்து பெரியவர்களிடம் பஞ்சாயத்து செய்தனர்.
இதன் காரணமாக, கிருஷ்ணா பிரசன்னாவை திட்டி உள்ளார். அதன்பின்னர் பிரசன்னா ஹைதராபாத்தில் தனது தாயுடன் தங்கியுள்ளார். பிரசன்னா ஒரு மாதத்திற்கு முன்பு கச்சிபௌலி காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமைக்காக ஸ்ரீராமா மீது புகார் அளித்தார்.
மேலும் கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் கோபமடைந்த ஸ்ரீராமா, வெங்கடராமனின் குடும்பத்தினருடன் சமரசம் செய்ய முடிவு செய்தார்" என்றார்.
ஸ்ரவந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், அன்றிரவே அவர் உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அவரைக் கொல்லும் நோக்கத்தில் ஸ்ரீராமா அரிவாளை எடுத்து கொண்டு, வெங்கடராமன் வீட்டுக்கு சென்றதை போலீஸார் கண்டுபிடித்தனர்.