ஹைதராபாத்தில் விரிவுபடுத்தப்பட்ட குவால்கம் நிறுவனம் அக்டோபரில் திறப்பு! காத்திருக்கும் வேலைவாய்ப்பு!
விவசாயம், ஸ்மார்ட் சிட்டிகள், டிஜிட்டல் கல்வி மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்கள் போன்ற துறைகளில் Qualcomm உடன் இணைந்து செயல்பட தெலுங்கானா அரசு ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் குவால்கம் நிறுவனம் ஹைதராபாத்தில் செயல்பாடுகளை விரிவுபடுத்த ரூபாய் 3,904 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் பல மென்பொருள் வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும் எனக்கூறப்பட்டுள்ளது.
செமி கண்டக்டர் மற்றும் தொலைத்தொர்பு ஜாம்பவான அமெரிக்காவின் குவால்கம் நிறுவனம் தனது கிளையை மிகப்பெரிய அளவில் ஐதராபாத்தில் திறக்கத் திட்டமிட்டடிருந்தது. இதோடு தனது செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக ரூபாய் 3,904 கோடியை முதலீடு செய்துள்ளது. இதற்காக பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், வருகின்ற அக்டோபர் மாதம் திறக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்நிறுவனம் அமெரிக்காவிற்கு வெளியே இரண்டாவது பெரிய கிளையாகவும் இது உள்ளது. இந்நிறுவனமானது ராயதுர்கத்தில் 1.572 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
தற்போது அதிக மூதலீடு செய்யப்பட்டுள்ள, ஐதராபாத் குவால்கம் நிறுவனம், ஐந்து ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் சுமார் 8, 700 மென்பொருள் வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், குல்காம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆகாஷ் பால்கிவாலா, துணைத் தலைவர்கள் ஜேம்ஸ் ஜீன், லக்ஷ்மி ராயபுடி, பராக் ஆகாஷே மற்றும் மூத்த இயக்குநர் தேவ் சிங் ஆகியோர் அடங்கிய குழு, சான்டியாகோவில் உள்ள தலைமையகத்தில் ராமாராவைச் சந்தித்தது. இந்த சந்திப்பின் போது, விவசாயம், ஸ்மார்ட் சிட்டிகள், டிஜிட்டல் கல்வி மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்கள் போன்ற துறைகளில் Qualcomm உடன் இணைந்து செயல்பட தெலுங்கானா அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும் பிரபல அமைச்சர் கே.டி.ஆர், மின்சார வாகன நிறுவனமான ஃபிஸ்கர் இன்க் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹென்ரிக் ஃபிஸ்கர், தலைமை நிர்வாக அதிகாரி கீதா பிஸ்கர் மற்றும் நிர்வாகக் குழுவைச் சந்தித்தார். அப்போது ஹைதராபாத்தைத் தங்கள் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தை அமைக்கத் தேர்ந்தெடுத்ததற்காக ஃபிஸ்கரின் தலைமைக் குழுவிற்கு நன்றி தெரிவித்தார். இதோடு வரவிருக்கும் மையத்தின் ஆரம்பத் தலைவர் எண்ணிக்கை 300 ஐடி நிபுணர்களாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது
மேலும் தெலுங்கானாவின் EV கொள்கை ( EV policy of Telangana.) குறித்து KTR ஒரு கண்ணோட்டத்தை வழங்கினார். அவரது அழைப்பின் பேரில், உள்ளூர் EV சுற்றுச்சூழலைப் புரிந்து கொள்ளவும், ஒத்துழைப்பின் பிற வழிகளை ஆராயவும் ஃபிஸ்கரின் குழு விரைவில் ஹைதராபாத் வரவுள்ளது. இதோடு ஃபிஸ்கரின் முதல் EV கார் மாடல் Ocean இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும். வரவிருக்கும் பியர் மாடல் 2023-24 இல் அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய ஃபிஸ்கர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.