Watch video: பாதயாத்திரையின்போது மாரடைப்பால் பரிதவித்த விவசாயி.. காப்பாற்றிய போலீஸ் ஹீரோ.. வைரல் வீடியோ!
அமராவதி மகா பாதயாத்திரையில் பங்கேற்ற விவசாயிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது அவரின் அவரின் உயிரை காவல்துறை அதிகாரி காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹைதராபாத்: அமராவதி மகா பாதயாத்திரையில் பங்கேற்ற விவசாயிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது அவரின் அவரின் உயிரை காவல்துறை அதிகாரி காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Andhra cop pumps life back into a farmer part of #AmaravatiMahaPadayatra, wins hearts as the video goes viral.
— Ashish (@KP_Aashish) October 18, 2022
A Farmer suffered a heart attack during the walkathon, witnessing this a police inspector performed CPR which saved his life.#AndhraPradesh @APPOLICE100 pic.twitter.com/TecdP67ZoI
அமராவதியை மாநில தலைநகராக தொடர வேண்டும் என்று கடந்த 36-வது நாளாக விவசாயிகள் மகா பாதயாத்திரை நடத்தி வருகின்றனர். 37வது நாளான இன்று விவசாயிகள் காலை ராஜமுந்திரி மல்லையப்பேட்டையில் இருந்து பாதயாத்திரையை தொடங்கினர்.
அந்த மகா பேரணியின்போது விவசாயி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது காவல் ஆய்வாளர் ஒருவர் அந்த விவசாயிக்கு உடனடியா சிபிஆர் செய்து அவரின் உயிரை காப்பாற்றினார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விவசாயிக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்ததும், அங்கிருந்த காவலர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால், கூட்டம் அதிகமாக இருந்ததால் நிலைமையை புரிந்துகொண்ட காவலர், விவசாயியை காப்பாற்ற வேண்டும் என நினைத்தார். இதையடுத்து உடனடியாக சிபிஆர் கொடுத்து விவசாயின் உயிரை காப்பாற்றினார்.
இதை பார்த்த அமராவதி விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயியின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த வீடியோவை ஆசிஷ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
రాజమండ్రి పాదయాత్రలో రైతుకు సీపీఆర్ చేసిన పోలీస్ #rajahmundry #amaravathi #amaravatifarmersmahapadayatra #ABPDesam #telugunews pic.twitter.com/sRGaMKVrTc
— ABP Desam (@ABPDesam) October 18, 2022
முன்னதாக, இந்த போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக சிறுபான்மையினர் அமைத்திருந்த வரவேற்பு பேனர்களை காவல்துறையினர் அகற்றினர். இதனால் சிறுபான்மையின தலைவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பாதயாத்திரை ஆசாத் செளக்கை அடைந்தபோது, உள்ளூர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு வந்து விவசாயிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அனுமதியின்றி, கருப்புக் கொடிகள் மற்றும் பலூன்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து, போராட்டக்காரர்கள் தண்ணீர் பாட்டில்கள், நாற்காலிகள் மற்றும் செப்பல்களால் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதை பார்த்தும் காவல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.