மேலும் அறிய
Advertisement
HPV Vaccine: கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி ரெடி... யாரெல்லாம் தகுதியானவர்கள்? முழு விவரம் தெரிஞ்சுகோங்க மக்களே
தடுப்பூசியான HPV ஊசி இந்த புற்றுநோயை தடுக்க உதவுகிறது. யாரெல்லாம் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள்?தடுப்பூசியின் பக்க விளைவுகள் விவரம்
கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இருந்து வருவது போல் பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி குறித்த விழிப்புணர்வும் அவசியம். இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
நகரங்களில் இருக்கும் பெண்களை காட்டிலும் கிராமப்புறத்தில் வசிக்கும் பெண்கள் தான் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 8 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெண்ணும் ஒரு ஆண்டில் 2,80,000 பெண்களும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறக்கிறார்கள் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கிடைக்கக்கூடிய தடுப்பூசியான HPV ஊசி இந்த புற்றுநோயை தடுக்க உதவுகிறது.
எப்படி பாதிக்கப்படுகிறார்கள்:
பாலியல் உறவின் போது ஹியூமன் பாப்பிலோமா எனப்படும் வைரஸ் தொற்றால் உண்டாகிறது. இதனை பாப் ஸ்மியர் பரிசோதனையின் மூலம் ஸ்கிரீனிங் செய்து கண்டறிய முடியும். பெரும்பாலான பெண்கள் இதுபோன்ற சுகாதார பரிசோதனைகளை தேர்வு செய்ய மறுக்கிறார்கள் என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள். காலதாமதம் செய்வதற்குள் இந்த புற்றுநோய் பரவி தீவிரமடைவதால் இறப்புகள் அதிகமாகின்றன.
யாரெல்லாம் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள்?
இளம் வயதினரான 11 - 12 வயதுடைய பெண்களுக்கு HPV தடுப்பூசி போடப்படுகிறது. பாலியல் விவகாரங்களால் ஏற்படும் தொற்றை தடுக்கிறது. ஆனால் 70 % வரை மட்டுமே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை தடுக்கும் . ஒருபோதும் பாதிக்காது என்று கூற இயலாது. எனவே தடுப்பூசி செலுத்திய பெண்களும் ஸ்க்ரீனிங்கை தொடர வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். 13-26 வயதுக்குட்பட்ட பெண்களும் HPV தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் ஆனால் அவர்களுக்கு அளவு வேறுபடும். பொதுவாக இளம் வயதினருக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது.

தடுப்பூசியின் பக்க விளைவுகள்:
20 % முதல் 90 % பேருக்கு ஊசி போட்ட இடத்தில் வலி அல்லது வீக்கம் இருக்கும். 10 % பேருக்கு காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. இருப்பினும் இதுவரையில் HPV தடுப்பூசியால் எந்த ஒரு மோசமான விளைவுகள் ஏற்படவில்லை என தெரிவிக்கின்றனர் சுகாதார மருத்துவர்கள்.
பிறப்புறுப்பு சுகாதாரம் மோசமாக இருப்பது தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உண்டாவதற்கான முக்கியமான காரணம். சுத்தத்தை கடைபிடிக்கும் சமூகங்கள் மத்தியில் இந்த புற்றுநோய் பாதிப்பு குறைவாகவே உள்ளது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள் இந்த வைரஸை எதிர்த்து போராட முடியும். இருப்பினும் இந்த வைரஸ் பல ஆண்டுகள் வரை ஆக்ட்டிவ் ஆக இருக்கும் என்பதால் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்க்கு வழிவகுக்கிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion