சொந்த வீடு கனவா? அரசு மானியத்தில் வீடு கட்ட சூப்பரான வழி இதுதான்.. ஸ்டெப்ஸை ஃபாலோ பண்ணுங்க..
PMAY-G Scheme: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 60% விழுக்காடும், மத்திய அரசு நிதி 40% விழுக்காடு மாநில அரசு நிதி என்ற விகிதத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் ஒரு மத்திய அரசு திட்டமாகும்.
தனக்கென்று சொந்த வீடு இல்லை என்ற கவலையைப் போக்கும் வகையில் தான் மத்திய அரசின் மூலம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்(PM Awas Yojana Scheme) செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் வீடு கட்டுவதற்குப் பயனாளிகள் மானியத்துடன் கடன் தொகையைப்பெற்றுக்காள்ள முடியும்.
குடிசை வீடோ அல்லது மாட மாளிகைகளோ இதில் ஏதாவது ஒன்று நம்முடையதாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் கனவாகும். எப்படியாவது கஷ்டப்பட்டாவது சொந்தவீட்டினைக்கட்டிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தாலும் தற்போதுள்ள கட்டுமானப்பொருள்களின் விலை உயர்வால் நிச்சயம் சாத்தியமாகாது. ஆனாலும் பெரும்பாலான மக்கள் வங்கிகள் மற்றும் தனியார் பைசான்ஸ்களின் மூலம் கடன் பெற்று வீடுகளைக்கட்ட ஆரம்பிக்கின்றனர். இந்த சலுகை என்பது அனைவரும் கிடைக்காத நிலையில் தான் பாமர மக்களையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை( PMAY-G ) நடைமுறைப்படுத்தியுள்ளது. குறிப்பாக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், ஊரகப்பகுதியில் 2022 ஆம் ஆண்டுக்குள் வீடு இல்லாதவர்களுக்கும் மற்றும் பழுதடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டித்தருவது தான் இதன் நோக்கம். இத்திட்டத்தின் மூலம் அனைவரும் நினைப்பது போல மானியத்துடன் கடன் தொகைப்பெற்று சொந்த வீட்டினைக் கட்டிக்கொள்ளலாம். இதற்கு யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள்? எப்படி விண்ணப்பிப்பது என தெரிந்துக்கொள்வோம்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தைப் பெறுவதற்கான தகுதிகள் | PMAY Scheme Eligibility Criteria
மத்திய அரசு மக்களுக்காக வழங்கக்கூடிய இத்திட்டத்தை அனைவரும் பெற முடியாது. இதற்கு பல்வேறு தகுதிகளை அரசு நிர்ணயித்துள்ளது.
வீடு இல்லாத குடும்பங்கள்
ஆதரவற்ற கைவிடப்பட்டவர்கள்
மனித கழிவுகளை கையால் எடுத்து அப்புறப்படுத்துபவர்கள்
புராதான மலைவாழ்மக்கள்
சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள்
கட்சா கூரை மற்றும் சுவருடன் கூடிய 0/1/2 அறைகளைக் கொண்ட வீடுகளைக்கொண்டவர்கள்
16- 59 வயதுடைய ஆண் உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள்
சாதாரண தொழிலாளர் வேலை மூலம் வருமானம் ஈட்டும் நிலமற்ற குடும்பங்கள்.
இதுப்போன்ற தகுதிகள் இருக்கும் பட்சத்தில், மத்திய அரசின் திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்காக விண்ணப்பிக்க முடியும். இதனையெல்லாம் கிராமசபை சரிபார்ப்பிற்காக அனுப்பப்பட்டு இறுதியில் பட்டியல் வெளியிடப்படும். இறுதிப்பட்டியலையடுத்து இத்திட்டத்தின் மூலம் வீடு கட்ட தகுதி பெறுபவர்கள் 3% வட்டியில் மானியத்துடன் ரூ.70,000 வரை கடன் பெற முடியும். அதிகபட்ச அசல் தொகை ரூ.2,00,000 மற்றும் அதற்கான அதிகப்பட்ச இ.எம்.ஐ தொகை ரூ.38,359 ஆகும்.
PMAY-G விண்ணப்பிக்கும் முறை | PMAY-G Apply Online
முதலில் PMAY-G என்ற https://pmaymis.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் ஆதார் கார்டு, பேங்க் பாஸ்புக், 100 நாள் வேலையில் பதிவு செய்யப்பட்ட வேலை அட்டை, ஸ்வச் பாரத் மிஷன் எண் ஆகிய ஆவணங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக பெண் விண்ணப்பதாரர் என்றால் கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும். மேற்கண்டவாறு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஒவ்வொரு மாநில அரசுகள் நடத்தும் பொதுச் சேவை மையத்தைப் பார்வையிட்டு விண்ணப்பப் படிவத்தை ஜிஎஸ்டி மற்றும் ரூ.25 கொடுத்து நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.