SP Hinduja Demise: உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் எஸ்.பி ஹிந்துஜா காலமானார்!
ஹிந்துஜா குழுமத்தின் தலைவரான ஸ்ரீசந்த் பர்மானந்த் ஹிந்துஜா (87) உடல்நலக்குறை காரணமாக நேற்று (மே 17 ஆம் தேதி) லண்டனில் காலமானார்.
ஹிந்துஜா குழுமத்தின் தலைவரான ஸ்ரீசந்த் பர்மானந்த் ஹிந்துஜா (87) உடல்நலக்குறை காரணமாக நேற்று (மே 17 ஆம் தேதி) லண்டனில் காலமானார். நான்கு ஹிந்துஜா சகோதரர்களில் இவர் தான் மூத்தவர், மேலும் நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாத நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்.
”கோபிசந்த், பிரகாஷ், அசோக் மற்றும் இந்துஜா குடும்பத்தினர் அனைவரும், ஹிந்துஜா குழுமத்தின் தலைவருமான எஸ்.பி. ஹிந்துஜாவின் மறைவை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவர் குடும்பத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருந்தார். மறைந்த எங்கள் தந்தை பி.டி. ஹிந்துஜாவின் ஸ்தாபகக் கொள்கைகள் மற்றும் மதிப்புகளை வழங்கினார். அவர் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே வலுவான உறவு இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்” என அந்தக் குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக, எஸ்பி ஹிந்துஜா உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நீண்ட காலமாக ஹிந்துஜா குடும்பத்தின் முகமாக இருந்தார். அவரது சகோதரர்களுடன் சேர்ந்து ஹிந்துஜா குழுமத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். வணிக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் மற்றும் தனியார் வங்கியான IndusIand, எண்ணெய், இரசாயனங்கள், எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் 38 நாடுகளில் உள்ள பல வணிகங்களுக்கு முக்கிய ஆதாராமாக விளங்கினார். ஹிந்துஜா குழுமத்தில் 2,00,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் ஈரானுடன் மசாலா பொருட்கள், ஜவுளி மற்றும் உலர் பழங்கள் வர்த்தகம் செய்து முத்திரை பதித்தனர்.
2022 ஆம் ஆண்டில், தனியார் பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கையில், ஹிந்துஜா குழுமத்தின் நிகர மதிப்பு 28 பில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டியது. எஸ்.பி ஹிந்துஜா தனது அண்ணன் கிரிதர் ஹிங்துஜாவின் மறைவிற்கு பின் 1963 ஆம் ஆண்டில் தனது தந்தையுடன் கை கோர்த்தார். பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் எஸ்.பி ஹிந்துஜா தனது சகேதரர்களுடன் இணைந்து ஹிந்துஜா குழுமத்திற்கென்று ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். கடைசி காலத்தில் எஸ்.பி ஹிந்துஜா தொழிலதிபர் வாழ்க்கையில் இருந்து விலகி ஆண்மீக வழியில் பயணித்தார். ஹிந்துஜா குடும்பத்தின் உறவினரான, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (Finolex Industries) தலைவர் பிரகாஷ் சாப்ரியா, “எஸ்.பி ஹிந்துஜா தன்மையானவர், அர்ப்பணிப்புள்ள குடும்பத்தலைவர், அதேசமயம் வியாபாரத்தில் முழுக்க முழுக்க சமயோசிதமானவர்” என தெரிவித்தார். அவரது மறைவு மிகவும் வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
மதுரையில் சுட்டெரிக்கும் வெயில்: உயிரை உறியும் அனல்காற்று: வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்