Breaking News Tamil LIVE: திருச்சி சிவா மகன் சூர்யா கைது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நிபுணர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
LIVE
Background
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நிபுணர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இதனால் மீண்டும் ஊரடங்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்ற அச்சம் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதாகவும், இதனால் மக்கள் மாஸ்க் அணிந்து முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியது. உலகில் இதுவரை மொத்தம் 53.83 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை மொத்தம் 63.20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 52 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸ் 226 நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில் தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வருகிறது. கடந்த 7 நாட்களில் இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படி 86,128 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும்,111 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,249 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 13 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான உயிரிழப்புகள் இணை நோய் காரணமாக ஏற்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால், கொரோனா நான்காம் அலை குறித்த அச்சத்தில் பொது மக்கள் உள்ளனர்.
இந்த நிலையில், கொரோனாவால் உலகளவில் இதுவரை மொத்தம் 100 கோடி பேருக்கு மனநலப்பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து உலக சுகாதார அமைப்பு முன்னதாக ஆய்வு ஒன்றை மேற்கொண்ட நிலையில் தற்போது இத்தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
திருச்சி சிவா மகன் சூர்யா கைது
தனியார் பேருந்து மோதியதில், தனது காருக்கு சேதம் ஏற்பட்டதாக கூறி, பணம் கேட்டு மிரட்டிய புகாரில் திருச்சி சிவாவின் மகன் சூர்யாவை திருச்சி காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் இழப்பீடு..!
கடலூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 3 லட்சம் நிதி இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Breaking News Tamil LIVE: அசாம் வெள்ளத்தில் பலியானவர்களுக்கு ராகுல் காந்தி அஞ்சலி
அசாம் வெள்ளத்தில் பலியானவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அஞ்சலி. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Breaking News Tamil LIVE: நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் நிலநடுக்கம்..பொதுமக்கள் அச்சம்
நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம். ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 4.3 ஆக பதிவு
Breaking News Tamil LIVE: இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா..கடந்த 24 மணி நேர பாதிப்பு நிலவரம்...
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,33,31,645ல் இருந்து 4,33,44,858 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 10,972 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதன்மூலம் 4,27,25,055 இல் இருந்து 4,27,36,027 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 38 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 5,24,941 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 83,990 ஆக உயர்ந்துள்ளது.