மேலும் அறிய
Advertisement
Today Headlines: நாடாளுமன்றம் முடங்கியது முதல்.. தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வரை.. இன்றைய தலைப்புச் செய்திகள் இதோ..!
Today Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம்; கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என முழக்கம்
- தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான மாணவர் கலந்தாய்வு இன்று துவக்கம்; முதல் நாளிலேயே 7.5 சிறப்பு இடஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு
- முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்; பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கபடும் என எதிர்ப்பார்ப்பு
- இரண்டொரு நாட்களில் காவிரி நீர் கிடைக்கும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்தபின் தமிழ்நாடு திரும்பிய அமைச்சர் துரைமுருகன் பேட்டி
- தமிழ்நாட்டில் குறைவான மழைப்பொழிவால் 25 வட்டங்களை வறட்சிப் பகுதியாக அறிவித்தது தமிழ்நாடு அரசு
- சத்தியமங்கலத்தில் வறண்ட கிணற்றிக்குள் விழுந்த சிறுத்தை 12 மணி நேர போராட்டத்துக்ப்பின்னர் மீட்பு
- எதன் அடிப்படையில் செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்ய செய்ய முடியும் என வழக்கு தொடுத்த அதிமுகவுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
- ரஜினிகாந்த் பவுண்டேசன் எனக் கூறி ரூபாய் 2 கோடி வரை மோசடி; சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்
- திரையரங்குகளில் இரவு 2 மணிவரை திரையிட திரையுலகம் சார்பில் முதலமைச்சரிடம் கோரிக்கை
இந்தியா:
- மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என நேற்று மீண்டும் இரண்டாவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.
- தேசத்தைக் காப்பாற்ற முடிந்த என்னால் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை; பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் கணவரான கார்கில் போரில் போராடிய ராணுவ வீரர் மனவேதனை
- மணிப்பூர் குற்றவாளிகளில் 4 பேர் மட்டுமே கைது; 11 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
- இலங்கை தமிழர்களுக்காக 75 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள்; ரணில் விக்ரமசிங்கே சந்திப்புக்குப் பின்னர் பிரதமர் மோடி அறிவிப்பு
- ராகுல் காந்தி மேல் முறையீடு விசாரணையில் 10 நாட்களுக்குள் எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க உத்தரவு - உச்ச நீதிமன்றம்
- மகாராஸ்ட்ரா கனம்ழையால் ராய்கார்ட்டில் நிலச்சரிவு; இதுவரை 22 சடலங்கள் மீட்பு
- ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறிய அமைச்சர்- ராஜேந்திர சிங்; முதல்வரின் பரிந்துரையால் பதவியைப் பறித்த ஆளுநர்.
- ஒடிசா ரயில் விபத்துக்கு சிக்னல் கோளாறுதான் காரணம் என மத்திய அரசு ஒப்புதல்
விளையாட்டு
- தனது 500வது சர்வதேச போட்டியில் சதம் விளாசி விராட்கோலி அபாரம்; கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டு
- வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இரண்வாது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 438 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்;
- இளையோருக்கான ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.
- ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட்டில் அடித்து நொறுக்கிய இங்கிலாந்து; தோல்வியைத் தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion