மேலும் அறிய
Advertisement
Today Headlines: உள்ளூர் முதல் உலகநாடுகள் வரை.. கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகள் இதோ..!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள பெங்களூரு செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்; விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்
- காவிரி நீர் பங்கீடு; மேகதாது விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் குரல் எழுப்பவேண்டும்- அண்ணாமலை பேட்டி
- நடிகர் சிவக்குமார் அறக்கட்டளை சார்பில் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார் நடிகர் சூர்யா
- ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை; ஆடி அமாவாசையால் போக்குவரத்து நெரிசலை மனதில் கொண்டு ஆட்சியர் உத்தரவு
- ஆடி அமாவாசையை முன்னிட்டி புன்னிய ஸ்தளங்களில் கூடிய பொதுமக்கள்; முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு
- சாலை விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு உதவினால் தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்படும் என அரசாணை - ஏற்கனவே மத்திய அரசு ரூபாய் 5 ஆயிரம் வழங்கிக்கொண்டுள்ளது.
- வேலூர் அரசு மருத்துவமனையில் இரவு 10 மணிக்கு ஆய்வு நடத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; நோயாளிகளை நலம் விசாரித்து மருத்துவமனை பதிவேட்டை பார்வையிட்டார்.
- மதுரை நூலகத்திற்கு திருவள்ளுவர் அல்லது தமிழ் அறிஞர்கள் பெயரை சூட்டி இருக்கலாம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
- மதுரையில் காவல்துறை விசாரணைக்குப் பின்னர் வீடு திரும்பியவர் உயிரிழந்த சம்பவம் - உடற்கூராய்வில் இதய பாதிப்பால் உயிரிழந்ததாக காவல்துறை விளக்கம்
- பெருந்துறையில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 107 பேர் கைது; வனத்துறை நடவடிக்கை
- குறுவை நெற்பயிர்கள் மஞ்சள் நோயால் பாதிப்பு; மகசூல் பாதியாகக் குறையும் என விவசாயிகள் கவலை
இந்தியா:
- பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையில் இரண்டு நாள் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்; பிரதமர் வேட்பாளர், தொகுதி பங்கீடு, குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல்
- பாஜக தலைமையில் இணைகிறதா மதசார்பற்ற ஜனதாதளம்; தேவகவுடாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பொம்மை தகவல்
- வடமாநிலங்களில் பெய்யும் கனமழையால் தமிழ்நாட்டில் 65 ஆயிரல் சரக்கு லாரிகள் வேலையில்லாமல் முடங்கியது; சுமார் 2 லட்சம் பேருக்கு வருவாய் இழப்பு
- டெல்லியில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் நிவாரணம் - மாநில அரசு
- ஆடி மாத வழிபாட்டிற்காக சபரிமலை நடைதிறப்பு; வரும் 21ஆம் தேதிவரை வழிபாடு நடத்த ஆன்லைனில் பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் அறிவுப்பு
உலகம்
- ஸ்பெயினில் பரவும் காட்டுத்தீ; 4 ஆயிரம் பொதுமக்கள் வெளியேற்றம்; தீயணைப்பு பணி தீவிரம்
- வட அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையால் பொதுமக்கள் அச்சம்
விளையாட்டு
- விம்பிள்டன் சாம்பியன் ஆனார் இளம் வீரர் அல்காராஸ்; விறுவிறுப்பான போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி அபாரம்
- ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 6 தங்கம் 12 வெள்ளி, 9 வெண்கலம் வென்று பதக்கப்பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த இந்தியா
- திருப்பூர் அருகே தேசிய பைக் பந்தயம்; நாடெங்கும் இருந்து பங்கேற்ற 110 வீரர்கள் பங்கேற்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
ஆட்டோ
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion