மேலும் அறிய
Advertisement
Today Headlines: 24 மணிநேரத்தின் முக்கிய நிகழ்வுகளை மொத்தமாக அறிய.! காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் - சென்னை தலைநகர் என்றால் மதுரை கலைநகர் என பேச்சு
- கல்வியும், சுகாதாரமும் திராவிட மாடல் அரசின் இரு கண்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் உரை, திராவிட இயக்கம் அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அறிவு இயக்கம் என்றும் பெருமிதம்
- தமிழகம் முழுவதும் நூற்பாலைகள் ஸ்டிரைக் - 10 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு
- பாக்கெட் மது ஜூஸ் ஆகவும் மாறலாம் - தமிழக அரசின் டெட்ரா மதுபான திட்டத்தை கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
- கும்பகோணம் பள்ளி தீ விபத்து - 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு
- தமிழ்நாட்டின் 3 ஆண்டு சட்டப்படிப்பு மாணவர் சேர்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - ஆன்லைனில் ஆகஸ்ட் 10ம் தேதி வரை விண்ணப்பிக்க நடவடிக்கை
- மாமல்லபுரம் கடற்கரை கோயிலை இரவு நேரத்திலும் கண்டுகளிக்க அனுமதி - மின்னொளியில் ஒளிர்ந்த கோயிலை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
- இந்தியாவில் 44 சதவிகித எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் - அதிர்ச்சி தகவல்
- ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்காக ஒருவாரம் விடுமுறை - ஊட்டியை சேர்ந்த தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
இந்தியா:
- சந்திரயான் 3 விண்கலத்தின் முதல் சுற்றுப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது - திட்டமிட்டபடி விண்கலம் பயணிப்பதாக இஸ்ரோ தகவல்
- பிரான்சு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி
- மணிப்பூர் எரிகிறது, ஐரோப்பா விவாதிக்கிறது - ஆனால் பிரதமர் மோடி மட்டும் மவுனம் காப்பதாக ராகுல் காந்தி சாடல்
- பாஜகவிற்கு எதிராக ஓரணியில் திரண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இரண்டாவது கட்டமாக பெங்களூருவில் நாளை சந்திப்பு - காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உட்பட 15 முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்
- வெள்ளக்காடாக மாறிய டெல்லியில் சாலைகள், சுரங்கங்களில் தேங்கிய நீரை அகற்றும் பணிகள் தீவிரம் - பாதிப்பு தொடர்பாக பாஜக - ஆம் ஆத்மி இடையே கருத்து மோதல்
- உத்தரபிரதேசத்தில் மின்சாரம் தாக்கி கன்வார் யாத்ரீகள் 5 பேர் பலி - பீகாரில் 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழப்பு
உலகம்:
- அமெரிக்காவில் உள்ள துணை தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு - காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியர்கள் அமைதிப் பேரணி
- பிரதமர் மோடிக்கு முழு சைவ விருந்து அளித்த ஐக்கிய அரபு அமீரக அதிபர்
- உக்ரைன் வீரர்களை எதிர்க்க ரஷ்யா அனைத்து வளங்களயும் பயன்படுத்துகிறது - ஜெலன்ஸ்கி பேச்சு
- இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்த இலங்கை தயார் - அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சு
விளையாட்டு:
- ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்வதே கனவு - இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ருதுராஜ் கெயிக்வாட் நம்பிக்கை
- அமெரிக்காவின் இண்டர் மியாமி அணியில் இணைந்த அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் - மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் மார்கெட்டா வோண்ட்ருசோவா
- சென்னையில் தேசிய டைவிங், வாட்டர்போலோ போட்டிகள் - 18ம் தேதி தொடக்கம்
- இந்திய கால்பந்து அணி இரண்டாவது முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்கிறது - தரவரிசைப்பட்டியலில் முதல் 8 இடங்களை பெற்றுள்ள அணிகளுக்கு மட்டுமே தொடரில் பங்கேற்க வாய்ப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion