மேலும் அறிய
Advertisement
Today Headlines: இதுவரை நடந்தது, இன்று நடக்கப்போவதை அறிய, காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டிற்கு 10 ஆய்ரம் டன் துவரம் பருப்பு, கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
- முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள் - விசாரணை நடத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- சென்னையில் விடிய விடிய இடி, மின்னலுடன் மிதமான மழை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் கனமழை பெய்யும் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- போக்குவரத்துத்துறை தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம் - ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் தற்காலிக ஏற்பாட்யு என்று விளக்கம்
- தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு - தொடங்கிய 10 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்
- ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட விவகாரம் - சென்னயில் காங்கிரஸ் கட்சியினர் மவுன போராட்டம்
- மாமல்லபுரம் புராதன சின்னங்களை மின்னொளியில் இரவு 9 மணி வரை காணலாம் - புதிய நடவடிக்கை வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தொல்லியல் துறை அறிவிப்பு
இந்தியா:
- 2 நாள் பயணமாக இன்று பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி - அங்கிருந்து வரும் 15ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல திட்டம்
- ரஃபேல் ஊழல் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கக் கோரி இந்திய அரசுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் கடிதம் - மோடி பிரான்ஸ் பயணிக்க உள்ள நிலையில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்
- டெல்லியில் யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு - இருகரைகளையும் மூழ்கடித்து பாயும் வெள்ளம், குடியிருப்புகளை சூழ்ந்தது
- எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு 24கட்சிகளுக்கு அழைப்பு - காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோன்யா காந்தி பங்கேற்கிறார்
- மேற்குவங்க மாநில உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி - பாஜக 9 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி அசத்தல்
- சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டின் 25 மணி நேரம், 30 நிமிடங்களுக்கான கவுண்ட்-டவுன் இன்று தொடங்குகிறது
உலகம்:
- பாகிஸ்தானில் வீட்டில் பிரிட்ஜ் வெடித்து நேர்ந்த பயங்கர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உடல் கருகி பலி
- அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் ஏவுகனை சோதனை நடத்திய வடகொரியா
- உலகின் முதல் மீத்தேன் - திரவ ஆக்சிஜன் எரிபொருள் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா
- ஈஸ்டர் தாக்குதல் - பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15 மில்லியன் இழப்பீடு வழங்கினார் இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா
விளையாட்டு:
- டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரை - நெல்லையை பந்தாடி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கோவை அணி
- இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்த மேற்கிந்திய தீவுகள் அணி - 70 ரன்கள் பின்தங்கியுள்ள இந்தியா
- சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றார் அஸ்வின் - கும்ப்ளே, ஹர்பஜன் உடனான பட்டியலில் இணைந்தார்
- விம்பிள்டன் டென்னிஸ் - இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய போபண்ணா ஜோடி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion