மேலும் அறிய
Advertisement
Headlines Today: காலை 8 மணி தலைப்புச்செய்திகள்...!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதா விவகாரம்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறார் அமைச்சர் ரகுபதி
- புதிதாக 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
- கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சி சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
- தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
- பள்ளிக் கல்வித் துறை வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர்: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
- மேட்டூர் அணையின் நீர் வரத்து 14,732 கன அடியில் இருந்து 12,226 கன அடியாக குறைந்துள்ளது.
- செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு பிரதமர் வருகையின் போது எந்தவித பாதுகாப்பு குளறுபடியும் இல்லை என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
- அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால சாதனைகள் குறித்து பேச நான் தயார், தி.மு.க.வின் 18 மாத சாதனை குறித்து பேச நீங்கள் தயாரா? என்று மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
இந்தியா:
- 89 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட குஜராத்தில் இன்று முதற்கட்ட தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
- குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
- குஜராத் மாநிலத்தில் 290 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம், போதைப்பொருள், மதுபானம் மற்றும் இலவசப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள சட்டப்பூர்வமான அழுத்தம் ஏதுமில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும், டாடா சன்ஸ் நிறுவனமும் இணைந்து ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவை இணைக்கின்றன.
- திப்ருகர் பல்கலைக்கழகத்தில் ரேகிங்கில் இருந்த தற்காத்துக்கொள்ள மாடியில் இருந்து மாணவன் கீழே குதித்த விவகாரத்தில், 18 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
- ’ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற முழக்கத்துடன் ஜி20 தலைமையை இன்று இந்தியா ஏற்கிறது.
உலகம்:
- இந்தியாவுடனான உறவில் தலையிடாதீர்கள் - அமெரிக்காவுக்கு சீனா மிரட்டல்
- இந்தியாவில் ஆண்டுக்கு 20 கோடி பேர் கொடிய வெப்ப அலைக்கு ஆளாக நேரிடும்: உலக வங்கி அதிர்ச்சி தகவல்
- அமெரிக்க நாடாளுமன்றத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண மசோதா நிறைவேறியது
- பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு
- பாகிஸ்தானில் காவல்துறை வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு
விளையாட்டு :
- இந்தியா - நியூசிலாந்து இடையிலான கடைசி ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது
உலகக் கோப்பை கால்பந்து தொடர்:
- உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
- போலத்தை வீழ்த்தி அர்ஜெண்டினா வெற்றி
- சவுதி அரேபியா வீழ்த்தி மெக்ஸிகோ வெற்றி
- நடப்பு சாம்பியன் பிரான்ஸை வீழ்த்தி துனிசியா வெற்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion