மேலும் அறிய
Advertisement
Headlines Today: குரூப் 4 க்கு 21.11 லட்சம் பேர் விண்ணப்பம்... மெக்டொனால்டை வாங்கும் எலான் மஸ்க்... இன்னும் பல!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- சட்டப்பேரவையில் பெட்ரோல், டீசல் உயர்வு தொடர்பாக மத்திய அரசு மீது முதலமைச்சர் முக ஸ்டாலின் தாக்கு
- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்தது : இதுவரை 21.11 லட்சம் பேர் விண்ணப்பம்
- சார்பதிவாளர்கள் அலுவலகங்கள் இனி சனிக்கிழமையும் செயல்படும் : அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாபற்றி செல்வப்பெருந்தகை பேசியதை நீக்க வேண்டியதில்லை : அமைச்சர் பொன்முடி விளக்கம்
- தமிழ்நாடு முழுவதும் ஒரு மாதமாக கஞ்சா வேட்டையில் குட்கா விற்ற 6,319 பேர் கைது : தமிழ்நாடு காவல்துறையினர் அதிரடி
- முதலமைச்சரை வேந்தராக கொண்டு சித்தா பல்கலைக்கழக மசோதா பேரவையில் நிறைவேற்றம்
இந்தியா:
- ’வெறுப்பு அரசியலால் இந்தியா வளர்ச்சி அடையாது’- பிரதமர் மோடியை சாடிய ராகுல் காந்தி
- வடகிழக்கு மாநிலங்களில் விரைவில் ஆயுதப்படை அதிராக சட்டம் முழுவதும் வாபஸ் : பிரதமர் மோடி உறுதி
- இந்தியாவில் 46 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது
- ஜம்மு- காஷ்மீரில் 3 மாதங்களில் 32 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை : பாதுகாப்பு படை அதிகாரிகள் தகவல்
உலகம் :
- ட்விட்டரை தொடர்ந்து கோகோ கோலா, மெக்டொனல்டை வாங்குகிறார் எலான் மஸ்க்
- முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் அபுதாபியின் டாஸிஸ் என்று அழைக்கப்படும் அபுதாபி கெமிக்கல் நிறுவனமும் TA’ZIZ EDC & PVC திட்டத்தில் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்து கையொப்பமிட்டுள்ளன.
- ஆப்கானிஸ்தான் நாட்டில் இருவேறு இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர்.
விளையாட்டு :
- கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ - பஞ்சாப் அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர்.
- இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
கல்வி
அரசியல்
பொது அறிவு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion