Todays News Headlines: கொரோனா தளர்வுகள்.. மழைக்கு வாய்ப்பு.. உக்ரைன் போர்.. சில முக்கியச் செய்திகள்!
இன்றைய தலைப்புச்செய்திகள் சில..
தமிழ்நாடு:
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிப்பு
திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த சுப நிகழ்வுகளில் 500 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு. திருமண நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு
தமிழகத்தில் துக்க நிகழ்வு மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சிகளில் 250 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம் எ.திருமணம் மற்றும் சுப நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகள் தவிர அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம் தமிழகத்தில் சமுதாய கலாசார அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
உள்நாட்டில் மருத்துவ கல்வி கற்க தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்யும் இலக்கு வெகு தொலைவில் இல்லை கர்நாடகாவிலும் குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது- முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைத்து அரசு உத்தரவு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் மே 30 வரை பொதுத்தேர்வு நடைபெறும். ஜூன் 17ல் முடிவு வெளியாகின்றன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு ஏப்ரல் 25ம் தேதி தொடங்கும். மே 5 முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. ஜூன் 23ஆம் தேதி அவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31ம் தேதி வரை பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. ஜூலை 7ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா:
உத்திரபிரதேசத்தில் ஆறாவது கட்டமாக இன்று வாக்குப்பதிவு. யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூரில் மக்கள் வாக்களிக்கின்றனர்
மேற்கு வங்க நகராட்சி தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி தேர்தல் நடந்த 108 நகராட்சிகளில் 103ஐ கைப்பற்றியது
LIC பொதுப் பங்கு வெளியீடு தள்ளிப் போக வாய்ப்பு. ரஷ்யா உக்ரைன் போர் நடப்பதால் சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தகவல்
எட்டு ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 110 டாலராக அதிகரிப்பு -பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம்
உலகம்:
ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றம். ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் இந்தியா சீனா உள்ளிட்ட 35 நாடுகள் நடுநிலை
ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தல்
போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதி
வானிலை:
தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் களமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.