பாலியல் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்த விளையாட்டுத்துறை அமைச்சர்..!
ஹரியான மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாரினைத் தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஹரியான மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாரினைத் தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜூனியர் தடகளப் பயிற்சியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், ஹரியானா விளையாட்டுத் துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது சண்டிகர் போலீஸார் இன்று பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார், மேலும் இது அவரது நற்பெயரினை கெடுக்கும் முயற்சி என்று கூறி தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில், "எனது நற்பெயரினை கெடுக்கும் முயற்சி நடக்கிறது. என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் வழக்குகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என நம்புகிறேன். விசாரணை அறிக்கை வரும் வரை முதல்வரிடம் விளையாட்டு துறை பொறுப்பை ஒப்படைக்கிறேன்," என்று கூறினார்.
குற்றம் சுமத்திய பயிற்சியாளர், ஹரியானா மாநிலத்தின் எதிர்க்கட்சியான இந்திய தேசிய லோக் தளத்தின் (INLD) அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இதில், மனோகர் லால் கட்டார் அரசாங்கம் சந்தீப் சிங்கை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் நவம்பர் வரை சமூக ஊடகங்களில் குருஞ்செய்திகள் அனுப்பி மீண்டும் மீண்டும் அமைச்சர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் கூறினார். அவர் தகாத முறையில் அவளைத் தொட்டதாகவும் மற்றும் குருஞ்செய்திகளில் தொடர்ந்து மிரட்டினார், தொடர்ந்து இவரது துன்புறுத்தல் காரணமாக சமூக ஊடகங்களை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்று அவர் குற்றம் சாட்டினார்.
அமைச்சர் சந்தீப் சிங் முதலில் ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை பார்த்ததாகவும், பின்னர் அவரை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் சந்திக்க வேண்டும் என்று அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். "அவர் எனக்கு இன்ஸ்டாகிராமில் செய்தி அனுப்பினார். மேலும் எனது தேசிய விளையாட்டு சான்றிதழ் நிலுவையில் இருப்பதாகவும், இது தொடர்பாக சந்திக்க விரும்புவதாகவும் கூறினார்" என்று மேலும் அவர் கூறினார். அந்த பெண், தன்னிடம் இருந்த வேறு சில ஆவணங்களுடன் இங்குள்ள அவரது குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகத்தில் அவரை சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும், அங்கு சென்றபோது, அமைச்சர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஹரியானா முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடாவும் இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
சந்தீப் சிங், குருக்ஷேத்ராவில் உள்ள பெஹோவாவில் இருந்து பிஜேபி எம்எல்ஏவாக உள்ளார். மேலும் ஒரு தொழில்முறை பீல்ட் ஹாக்கி வீரர் ஆவார், மேலும் இந்திய தேசிய ஹாக்கி அணியின் கேப்டனாகவும் இருந்தார். பிரபல பஞ்சாபி பாடகரும் நடிகருமான தில்ஜித் தோசாஞ்ச் அவரது பாத்திரத்தில் நடித்த 'சூர்மா' என்ற தலைப்பில் மிஸ்டர் சிங்கின் வாழ்க்கை வரலாறு 2018 இல் வெளியிடப்பட்டது. எம்டிவி ரோடீஸ் என்ற ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.