Haryana Doctors: மருத்துவர்கள் இனி ஜீன்ஸ், மேக்கப் போடக்கூடாது - அதிரடி கட்டுப்பாடுகள் என்னென்ன?
ஹரியானாவில் அரசு மருத்துவமனைகளில் உள்ள ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
ஆடை கட்டுப்பாடு:
ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பிப்ரவரி 9 ஆம் தேதி ஹரியானா அரசு ஆடைக் கட்டுப்பாடு கொள்கையை வெளியிட்டது. இந்த கொள்கையானது, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடைக் கட்டுப்பாட்டைப் பின்பற்றாத எவரும் கடமையில் ஈடுபடாதவர்களாக ( விடுப்பு நாளாக ) கருதப்பட்டு கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநில அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஒரே அடையாளத்தை கொண்டுவரவும், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை அடையாளம் காண நோயாளிகளுக்கு உதவும் வகையிலும் புதிய ஆடைக் கட்டுப்பாட்டு கொள்கையை ஹரியானா அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
ஜீன்ஸ் தடை:
டெனிம் ஜீன்ஸ், பலாசோ பேண்ட், பேக்லெஸ் டாப்ஸ் மற்றும் பாவாடை அணிய இந்த கொள்கை தடை விதிக்கிறது. பெண் மருத்துவர்கள் மேக்கப் அல்லது அதிக நகைகளை அணிய கூடாது என்றும், ஆண்கள் தங்கள் சட்டை காலர்களை விட நீளமாக முடியை வளர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பெண் மருத்துவர்கள் நகங்களை நீளமாக வளர்வதையும் இந்த கொள்கை கட்டுப்படுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் விளக்கம்:
பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த கொள்கை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடைக் கட்டுப்பாட்டைப் பின்பற்றாத எவரும் கடமையில் ஈடுபடாதவர்களாகக் கருதப்பட்டு கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அது கூறுகிறது.
ஆடைக் கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது ஏன் என்பது குறித்து தெரிவித்துள்ள ஹரியானா சுகாதார அமைச்சர் அனில் விஜ், "மருத்துவமனைகளில் மருத்துவர்களையும் நோயாளிகளையும் வேறுபடுத்துவது கடினம். அதனால் ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது. இது ஊழியர்களின் கண்ணோட்டத்தை மேம்படுத்தும், மேலும் நோயாளிகளுக்கு சிறந்த சுகாதார வசதிகளைப் பெற உதவும்,
"சீருடைகளை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்து வருகின்றனர். நாங்கள் எந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றாலும், ஒரு மருத்துவமனை ஊழியர் கூட சீருடை இல்லாமல் காணப்படுவதில்லை, அதே நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவமனை ஊழியர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளது. அதன் காரணமாகவே, இந்த ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று விஜ் கூறினார்.
அடையாள அட்டை கட்டாயம்:
பாதுகாப்பு ஊழியர்கள், வாகன ஓட்டுநர்கள், துப்புரவு ஊழியர்கள் மற்றும் சமையலறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடும் இந்த கொள்கையில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை ஊழியர்கள் தங்கள் பெயர் மற்றும் பதவிகள் அடங்கிய பெயர் உள்ள அடையாள அட்டையை கட்டாயமாக அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
புதிய ஆடைக் கட்டுப்பாடு கொள்கை குறித்து ஹரியானா சிவில் சர்வீசஸ் மருத்துவ சேவை சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் வீரேந்தர் தண்டா கூறுகையில், இந்த அறிவுறுத்தல்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் மருத்துவர்களிடையே விவாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Budget: 'சாரிப்பா...' பழைய பட்ஜெட்டை சட்டசபையில் படித்த ராஜஸ்தான் முதலமைச்சர் - என்னதான் நடந்தது?...