Harish Rawat Health: போராட்டத்தில் சரிந்து கீழே விழுந்த முன்னாள் முதலமைச்சர் - நடந்தது என்ன? வைரல் வீடியோ
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில், கட்சி நிர்வாகி ஒருவரின் மடியின் மேல் ராவத் படுத்திருப்பது பதிவாகியுள்ளது.
உத்தராகண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரிஷ் ராவத். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர், கட்சி சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
இதற்கு மத்தியில், ஹரிஷ் ராவத்தின் உடல் நிலை மோசமடைந்தது. சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில், கட்சி நிர்வாகி ஒருவரின் மடியின் மேல் ராவத் படுத்திருப்பது பதிவாகியுள்ளது.
उत्तराखण्ड में छात्रों के प्रदर्शन में कूदी कांग्रेस
— Himanshu Purohit (@Himansh256370) February 10, 2023
प्रदेश कांग्रेस के पदाधिकारियों के साथ पहुँचे पूर्व सीएम हरीश रावत
#Uttarakhand #Paperleak #uksssc #ukpcs #harishrawat @harishrawatcmuk @INCUttarakhand pic.twitter.com/Ejg6uYOlsv
அவரை சுற்றி கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினாலும் அவரது உடலில் எந்த விதமான அசைவும் காணப்படவில்லை.
அவர் கீழே மயங்கி விழுந்து விட்டது போல தோன்றுகிறது. ஆனால், அதை உறுதி செய்ய முடியவில்லை. அவர் தரையில் கிடப்பதைக் கண்ட அவரது ஆதரவாளர்கள் அவரைப் கவனித்து கொள்கின்றனர்.
உத்தரகாண்டில் நடந்ததாகக் கூறப்படும் ஆட்சேர்ப்பு முறைகேடுகள் குறித்து மத்திய புலனாய்வுப் அமைப்பு (சிபிஐ) விசாரிக்கக் கோரி மாணவர்கள் மற்றும் பிற இளைஞர் அமைப்புகள் டேராடூனில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று, நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதாக போலீசார் தடியடி நடத்தினர். காவல்துறையின் கூற்றுப்படி, சில மாணவர்கள் கற்களை வீசி 15 காவல்துறையினரை காயப்படுத்தினர்.
பதிலடியாக கூட்டத்தைக் கட்டுப்படுத்த அவர்கள் தடியடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
மாணவர்கள் உண்மையான பிரச்னைகளை எழுப்புவதாகவும் அவர்கள் மீது காவல்துறையினர் மிருகத்தனமான நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறி காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் தாமியின் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக அக்கட்சியினர் மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது. உத்தராகண்ட் அரசியலில் முதல்முறையாக ஒரு கட்சி ஆட்சியை தக்கவைத்த 2022ஆம் ஆண்டில்தான்.
2017 முதல் 2022 வரையிலான பாஜக ஆட்சி காலத்தில் மூன்று முறை முதலமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர். திரிவேந்திர சிங் ராவத், தீரத் சிங் ராவத் ஆகியோர் மாற்றப்பட்டு புஷ்கர் சிங் தாமிக்கு முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
2022 தேர்தலில், புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜக தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.