மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஹரியானா மாநிலத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது.
ஹரியானாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஹரியானாவுடன் சேர்த்து ஜம்மு காஷ்மீருக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை தொடர்ந்து நடைபெறும் முதல் மாநில தேர்தல் என்பதால் ஒட்டு மொத்த நாட்டின் கவனமும் ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மீது இருந்தது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
இந்த நிலையில், ஆட்சிக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஹரியானா மாநிலத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது.
தைனிக் பாஸ்கர் எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ஹரியானாவில் காங்கிரஸ் 44 முதல் 54 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. பாஜக 15 முதல் 29 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய லோக் தள கூட்டணி 1 முதல் 5 இடங்களில் ஜெயிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
பாஜகவை வீட்டுக்கு அனுப்புகிறதா காங்கிரஸ்?
Matrize நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ஹரியானாவில் காங்கிரஸ் 55 முதல் 62 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. பாஜக 18 முதல் 24 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி 0 முதல் 3 இடங்களில் ஜெயிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
Dhruv research எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ஹரியானாவில் காங்கிரஸ் 55 முதல் 62 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. பாஜக 18 முதல் 24 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி 0 முதல் 3 இடங்களில் ஜெயிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
Peoples Pulse எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ஹரியானாவில் காங்கிரஸ் 49 முதல் 61 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. பாஜக 20 முதல் 32 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி 0 முதல் 1 இடத்தில் ஜெயிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஹரியானா மாநிலத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. 10 ஆண்டு கால பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.