![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ஞானவாபி மசூதி: இந்திய தொல்லியல் துறையின் ஆய்வு வெளியிடப்படுமா? நீதிமன்றம் பரபர முடிவு
ஞானவாபி மசூதி தொடர்பாக இந்திய தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையின் நகலை தங்களுக்கு அளிக்க வேண்டி, இந்து தரப்பினர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
![ஞானவாபி மசூதி: இந்திய தொல்லியல் துறையின் ஆய்வு வெளியிடப்படுமா? நீதிமன்றம் பரபர முடிவு Gyanvapi case Varanasi district court defers its decision on ASI report to January 24 ஞானவாபி மசூதி: இந்திய தொல்லியல் துறையின் ஆய்வு வெளியிடப்படுமா? நீதிமன்றம் பரபர முடிவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/07/01d151ad895283bf05d60d50fa926ee21704622698976729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி. இங்கு, ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். இந்த மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா? என்பதை அறிய, அங்கு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி இந்துக்கள் தரப்பு மனு தாக்கல் செய்தனர்.
ஞானவாபி வழக்கு:
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், வழக்கை விசாரித்த இந்தியா தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
ஞானவாபி மசூதியில் ஆய்வு நிறைவுபெற்றதை தொடர்ந்து, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் அது தொடர்பான ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறை சீலிடப்பட்ட கவரில் சமர்பித்தது. வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, ஆய்வறிக்கையை பொதுவெளியில் வெளியிட்டால், அது தேவையற்ற வதந்திகளுக்கு வழிவகுக்கும் என்றும் தவறான தகவல்கள் வேண்டுமென்றே பரப்பப்படும் என்றும் இந்திய தொல்லியல் துறை நீதிமன்றத்தில் கூறியது.
ஆனால், ஆய்வறிக்கையின் நகலை தங்களுக்கு அளிக்க வேண்டி, இந்து தரப்பினர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி ஏ.கே. விஸ்வேஷ், "ஞானவாபி மசூதி தொடர்பான ஆய்வறிக்கையை பொதுவெளியில் வெளியிடலாமா? அல்லது வேண்டாமா? என்பது தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆய்வறிக்கையின் நகலை வழங்கலாமா? வேண்டாமா? என்பது தொடர்பான முடிவும் வரும் ஜனவரி மாதம் 24ஆம் தேதி எடுக்கப்படும்" என்றார்.
வழிபாட்டு தலங்கள் சட்டம் சொல்வது என்ன?
வழிபாட்டு தலங்கள் சட்டம், 1991இன்படி, "கடந்த 1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அன்று, வழிபாட்டு தலங்கள் எப்படி இருந்ததோ, அதன்படியே தொடர வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது, இந்த சட்டத்தை மீறி, ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும், அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இச்சூழலில், அயோத்தி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)