மேலும் அறிய

உச்சநீதிமன்றத்தின் ஜிஎஸ்டி தீர்ப்பு: நிதிச் சுதந்திரத்துக்கான புதிய பார்வையா? - நிபுணர்கள் கருத்து

கூட்டாட்சியின் முக்கியத்துவம் பற்றிய விவாதத்திற்கு புதிய ஆற்றலைக் கொடுக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளுக்குக் கட்டுப்படாது என்ற உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, மாநிலங்களின் நிதிச் சுதந்திரம் மற்றும் கூட்டுறவுக் கூட்டாட்சியின் முக்கியத்துவம் பற்றிய விவாதத்திற்கு புதிய ஆற்றலைக் கொடுக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த் மற்றும் விக்ரம்நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் நம்பகத்தன்மையான மதிப்பைக் கொண்டிருக்கும் என்று கூறியது. ஜிஎஸ்டி தொடர்பான விஷயங்களில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் இரண்டும் சமமாக சட்டம் இயற்றலாம் என்றும் நீதிமன்றம் கூறியது. ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு பரிந்துரை அமைப்பு மட்டுமே என்றும், அதன் பரிந்துரைகள் மத்திய அல்லது மாநிலங்களுக்கு கட்டுப்படாது என்றும் அமர்வு கூறியுள்ளது.

சிலானா மற்றும் சிலானா சட்ட அலுவலகங்களின் நிர்வாகப் பங்குதாரரான சந்தீப் சிலானா கூறுகையில், “உச்சநீதிமன்றத்தின் இத்தகைய அவதானிப்புகள் பிரிவு 279Aக்குக் கீழ் வந்தாலும் ​​மாநிலங்கள் அதன் சொந்த முடிவை எடுப்பதற்கும், நிதி சுதந்திரம் குறித்த விவாதத்திற்கும் புதிய ஆற்றலை இது அளிக்கும். கூட்டாட்சித் தத்துவத்தின் வழியாக ஜிஎஸ்டி வரி தனது முழுமையான வெற்றியை அடைய இது வழிவகுக்கும்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் குஜராத் நீதிமன்றம் ஐ ஜிஎஸ்டி சார்பாக அளித்த தீர்ப்பு மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில் ஜிஎஸ்ட் வரி தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய மாநில அரசுகள் ஆகிய இரண்டிற்கு சம உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இந்தத் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில்,  “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே2021 என்னை GST கவுன்சிலுக்கு நியமித்ததிலிருந்தே இதை நான் கூறிவருகிறேன். இத்தீர்ப்பு அதனை தெளிவுபடுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. GST-இல் முழு மாற்றங்கள் தேவை” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தப் பதிவில் அவர் தன்னுடைய உரையையும் பதிவிட்டுள்ளார். அந்த உரையில், “இவை அனைத்தையும் பார்க்கும் போது, நாம் அரசியலமைப்பு சட்டத்தின்படியும். வரலாற்று ரீதியாகவும் ஓர் விந்தையான இடத்தை நோக்கி நகர்ந்துள்ளோம் - சர்வ வல்லமை படைத்த அனைத்து தளங்களையும் கூர்நோக்கும். ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டம் எதிர்நோக்காத ஒரு GST மன்றம். இம்மன்றத்திற்கு அதன் முக்கிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைப்பு ரீதியாகவும், தொழில்நுட்ப தள அடிப்படையிலும் போதுமான வசதிகள் இல்லை.

இந்த மன்றம் வெறுமென ஓர் அடையாள சடங்காக, முத்திரை குத்த மட்டுமே செயல்படும் போது தான் இந்த வித்தை அபாயகரமாக கொள்கைகளை வகுக்கும் உண்மையான மாறுகிறது. அதிகாரம் (சட்டப்படி) CRICயின் TRU, பலவீனமான GST செயலகம் தோற்றத்தில் மட்டுமே அரசாங்கத்தை பிரதிபலிக்கும் GST பிணையம் போன்ற சில தற்காலிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது” என்பதை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
ADMK Case Verdict: இரட்டை இலை சின்னம் முடங்குமா.? உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்...
இரட்டை இலை சின்னம் முடங்குமா.? உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்...
Gold Rate Reduced: ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... பொதுமக்கள் ஆறுதல்...
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... பொதுமக்கள் ஆறுதல்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”Illaiyaraja Deva Controversy | “நான் காசு வெறி புடிச்சவனா” இளையராஜா மீது தேவா ATTACK அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
ADMK Case Verdict: இரட்டை இலை சின்னம் முடங்குமா.? உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்...
இரட்டை இலை சின்னம் முடங்குமா.? உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்...
Gold Rate Reduced: ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... பொதுமக்கள் ஆறுதல்...
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... பொதுமக்கள் ஆறுதல்...
Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
“முரட்டுக்காளை; விட்டால் முட்டிவிடுவேன் என்று சொல்வார்; நீங்கள் அமைச்சர் தானே” – போட்டுத்தாக்கிய அண்ணாமலை
“முரட்டுக்காளை; விட்டால் முட்டிவிடுவேன் என்று சொல்வார்; நீங்கள் அமைச்சர் தானே” – போட்டுத்தாக்கிய அண்ணாமலை
IND Vs ENG 3rd ODI: ஒயிட்-வாஷ் செய்யுமா இந்தியா? ஃபயர் விடுவாரா கோலி? இங்கிலாந்து உடன் 3வது ஒருநாள் போட்டி
IND Vs ENG 3rd ODI: ஒயிட்-வாஷ் செய்யுமா இந்தியா? ஃபயர் விடுவாரா கோலி? இங்கிலாந்து உடன் 3வது ஒருநாள் போட்டி
Today Power Shutdown Tamilnadu: தமிழகத்தில் இன்று ( 12.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Today Power Shutdown Tamilnadu: தமிழகத்தில் இன்று ( 12.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Embed widget