ஒரு கோடி MSME பதிவுகளில் 18% மட்டுமே பெண் பயனாளர்கள்… மாநிலங்களவையில் இணை அமைச்சர் தகவல்!
6.33 கோடி MSME களில் 16 ஆம் நிதியாண்டில் நடத்தப்பட்ட தேசிய மாதிரி ஆய்வு (NSS) 73 வது சுற்று அடிப்படையில், 6.08 கோடி, அதாவது 79.63 சதவீத நிறுவனங்களை ஆண்கள் வைத்துள்ளனர்.
நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (MSME) 18 சதவீதம் மட்டுமே பெண் தொழில் முனைவோர்களுக்குச் சொந்தமானது என அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களவையில் இணை அமைச்சர்
ஆகஸ்ட் 3, 2022 நிலவரப்படி, உத்யம் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட மொத்த 99,58,903 எம்எஸ்எம்இக்களில் 17,96,408 நிறுவனங்கள் மட்டுமே பெண்களுக்குச் சொந்தமான எம்எஸ்எம்இகள் என்று மாநிலங்களவையில் எம்எஸ்எம்இகளுக்கான இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா பகிர்ந்துள்ளார். மொத்த MSME எண்ணிக்கையில் பெண்களுக்குச் சொந்தமான MSMEக்களின் பங்கு கடந்த ஆண்டு டிசம்பரில் 16.6 சதவீதத்தில் இருந்து சற்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 12, 2021 நிலவரப்படி, 60.38 லட்சம் MSMEகள் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெண் பயனாளர்கள் சதவிகிதம்
MSME அமைச்சகத்தின் 2021-22 ஆண்டு அறிக்கையின்படி, 6.33 கோடி MSME களில் 16 ஆம் நிதியாண்டில் நடத்தப்பட்ட தேசிய மாதிரி ஆய்வு (NSS) 73 வது சுற்று அடிப்படையில், 6.08 கோடி, அதாவது 79.63 சதவீத நிறுவனங்களை ஆண்கள் வைத்துள்ளனர். இதில் பெண்களுக்கு சொந்தமான சதவீதம் வெறும் 20 மட்டுமே. மேலும், கிராமப்புறங்களில் (77.76 சதவீதம்) ஒப்பிடும்போது, நகர்ப்புறங்களில் (81.58 சதவீதம்) ஆண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.
பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம்
இதற்கிடையில், பல அரசுத் திட்டங்களில் பெண் பயனாளிகளின் எண்ணிக்கை கோவிட்-க்கு முந்தைய காலத்தை விட தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் லோக்சபாவில் வர்மா பகிர்ந்த தரவுகளின்படி, பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் 27,285 ஆக இருந்த மொத்த பெண் பயனாளிகளின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் இருந்து 43 சதவீதம் அதிகரித்து 39,154 ஆக இருந்தது.
பெண் தொழில்முனைவோர்
இதேபோல், பொதுக் கொள்முதல் கொள்கையின் கீழ், அரசுத் துறைகள் மற்றும் பொது நிறுவனங்களால் குறைந்தபட்சம் 3 சதவீத வருடாந்திர கொள்முதல் கட்டாயமாகும். பெண் பயனாளிகளின் எண்ணிக்கை 2020 நிதியாண்டில் 3,666 ஆக இருந்து, 180 சதவீதம் அதிகரித்து 2022ஆம் நிதியாண்டில் 10,287 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் (ESDP) கீழ், பெண் தொழில்முனைவோரின் ஆதரவு 2021 ஆம் நிதியாண்டில் 13,640 இல் இருந்து 2022 ஆம் நிதியாண்டில் 24,734 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதலீட்டு நிறுவனமான, ஆவிஷ்கார் குழுமத்தின் ஆலோசனைப் பிரிவின் அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்குச் சொந்தமான மிகச் சிறிய வணிகங்களின் (WVSEs) கடன் தேவை ரூ. 83600 கோடியாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்