தெரு விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் மாணவி.. உங்களை இது நெகிழ்த்தும்.. வீடியோ வைரல்..
நடைபாதையில் இருக்கும் தெருவிளக்குகளின் வெளிச்சத்தில் சிறுமி தனது பாட புத்தக்கத்தை படிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.. இன்றைய தினத்தின் மிக சிறந்த வீடியோ என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ளது.
நடைபாதையில் இருக்கும் தெருவிளக்குகளின் வெளிச்சத்தில் சிறுமி தனது பாட புத்தக்கத்தை படிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
சிறுவயதில், கடினமாகப் படிப்பது நம்மை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் என்பதை நாம் அனைவரும் கற்றுக்கொண்டோம். ஒவ்வொரு குழந்தையும் தான் பள்ளியில் காலெடுத்து வைக்கும் தருணம் முதல், படிப்பு மட்டுமே நம்மலை வாழ்க்கையில் முன்நோக்கி எடுத்து செல்லும் என்ற மந்திரம் மந்தில் பதிகிறது. இருப்பினும், வாழ்க்கை எப்போதும் அனைவருக்கும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் சிறந்த பள்ளிகளில் சேர்ந்து, பல விதமான வழிகாட்டுதலின் கீழ் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அதே சூழல் அனைவருக்கும் அமைவதில்லை. ஒரு சிலருக்கு மின் விளக்கு பொருந்திய அறை இருப்பது கூட கடினமாக உள்ளது.
இந்த குழந்தைகள், அவர்களின் மன உறுதியுடனும், வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு முரண்பாடுகளை எதிர்த்துப் போராடுகிறார்கள்.
அதுபோல் மன உறுதியுடன் போராடும் ஒரு சிறுமியின் விடியோ பதிவு இணையத்தில் Stutes Zone 987 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சியில் நடைபாதையில் இருக்கும் தெருவிளக்குகளின் வெளிச்சத்தில் சிறுமி தனது பாட புத்தக்கத்தை படிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.. “ஆஜ் கி சப்சே அச்சி வீடியோ” (இன்றைய தினத்தின் மிக சிறந்த வீடியோ) என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வைரலான வீடியோ காட்சி சாலைகளில் வாகனங்கள் ஒரு புறம் சென்று கொண்டிருக்க, அந்த சிறுமி தெரு விளக்கு வெளிச்சத்தில் படிப்பது போல் அமைந்திருந்தது.
தெருவிளக்குகளுக்குக் கீழே அவள் நோட்புக்கில் எதையோ எழுதுவதைக் காணலாம். தெருக்களில் வாகனங்களின் சத்தம் கேட்டாலும், அவளது செறிவு அசையாது இருந்தது. படிப்பில் மூழ்கிய பெண் தன் குறிப்பேட்டில் இருந்து கூட நிமிர்ந்து பார்க்கவில்லை. வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், அந்தப் பெண் தனது படிப்பைத் தடுக்க எந்தத் தடையும் வராமல், கவலைப்படாமல் இருக்கிறாள். இந்த சிறு வீடியோ காட்சி நெட்டிசன்களிடமிருந்து பலவிதமான பதில்களை பெற்றுள்ளது. இடையூறுகளுக்கு மத்தியில் அவரது முயற்சிகளைப் பாராட்டியுள்ளனர்.
உண்மையாகவே இது மிக சிறந்த வீடியோ என்று ஒருவர் குறிப்பிட்டார். “இது போன்ற கடின உழைப்பால் குழந்தைகள் படித்து நாட்டை பெருமைப்படுத்துகிறார்கள். உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று பாராட்டினார் வேறு ஒருவர். இதுவரை, இந்த வீடியோ 66.7k பார்வைகளை பெற்றுள்ளது மற்றும் Instagram இல் 5k க்கும் அதிகமான லைக்ஸ் பெற்றுள்ளது.
View this post on Instagram