மேலும் அறிய

Stalin Gift to PM Modi : ’பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த பரிசு  என்ன தெரியுமா.. ?

சோனியா காந்தியிடம் திராவிட நாகரிகம் குறித்த புத்தகத்தை பரிசாக வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமரிடம் தமிழின் முக்கியத்தும் குறித்த நூலையும் கொடுத்திருப்பது பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது

முதலமைச்சராக பதவியேற்றதும் முதன் முறையாக டெல்லிக்கு சென்ற மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையம், தமிழ்நாடு இல்லம் ஆகிய இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

Stalin Gift to PM Modi : ’பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த பரிசு  என்ன தெரியுமா.. ?

நேற்று மாலை டெல்லி லோக் கல்யான் மார்க் சாலையில் உள்ள இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து, தமிழ்நாட்டின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக முதல்வர் ஸ்டாலின் அளித்த செய்திகள் எல்லாம் எல்லாம் ஊடகங்களிலும் வெளிவந்துவிட்டன. அதில், பிரதமரை ஸ்டாலின் சந்திக்கும்போது, பொன்னாடை போர்த்துவதும், பூங்கொத்து கொடுப்பதுமான புகைப்படங்களும் அடக்கம்.Stalin Gift to PM Modi : ’பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த பரிசு  என்ன தெரியுமா.. ?

ஆனால், வெளிவராத ஒரு விஷயம் ஒன்று இருக்கிறது. அதுதான், பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசளித்த ஒரு புத்தகம். ஆம் இன்று எப்படி சோனியா காந்திக்கு ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய Journey of a Civilization: Indus to Vaigai என்ற புத்தகத்தை தேர்வு செய்து வழங்கினாரோ அதேபோன்று, நேற்றும் பிரதமரிடம் ஒரு முக்கியமான புத்தகத்தை பரிசளித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அஜயன்பாலா எழுதிய ‘செம்மொழி சிற்பிகள்’ என்ற புத்தகம் தான் அது.Stalin Gift to PM Modi : ’பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த பரிசு  என்ன தெரியுமா.. ?

தனது மனுவில் 13வது பிரிவில் இடம்பெற்றிருந்த தமிழில் மொழி குறித்த கோரிக்கையில் தமிழை இந்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கவேண்டும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மீட்டுத் தர வேண்டும் என்று வலியுறுத்திவிட்டு, அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ‘ செம்மொழி சிற்பிகள்’ என்ற இந்த புத்தகத்தை மிக நுட்பமாக தேர்ந்தெடுத்து பிரதமரிடம் வழங்கியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Stalin Gift to PM Modi : ’பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த பரிசு  என்ன தெரியுமா.. ?

உலகின் உயர்ந்த கலாச்சார பின்புலம் கொண்ட நம் செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்புக்கு காரணமான 100 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, அவர்களின் நூல்கள் அவர்களின் உருவ சித்திரம் ஆகியவற்றுடன் உருவாக்கம் கொண்ட இந்த நூல், தமிழை போற்றி பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2010ல் கோவை செம்மொழி மாநாட்டிற்காக அப்போதைய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்த பரிதி இளம் வழுதி முன்னெடுப்பால் தயார் செய்யப்பட்ட இந்த நூல், மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி கையால் வெளியிடப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு. இப்போது பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ள இதே ‘செம்மொழி சிற்பிகள்’ புத்தகத்தைதான் கடந்த 2018ஆம் ஆண்டு சோனியாகாந்தியின் பிறந்தநாள் அன்று அவருக்கு பரிசளித்தார் மு.க.ஸ்டாலின்.

தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, சால்வைகள் கொண்டுவரவேண்டாம் புத்தகங்கள் மட்டுமே கொடுங்கள் என்று அறிவுறுத்தியிருந்த ஸ்டாலின், தானும் முக்கியத் தலைவர்களை சந்திக்கும்போது புத்தகங்களை வழங்கி வருகிறார். இப்படி இந்த முறை பிரதமரிடம் தமிழின் முக்கியத்துவம் பற்றிய செம்மொழி சிற்பிகள் நூலையும், சோனியா காந்தியிடம் திராவிட பண்பாடு குறித்த Journey of a Civilization: Indus to Vaigai புத்தகத்தையும் வழங்கி, மிளிர்ந்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: வேகமெடுக்கும் ஃபெங்கல் புயல்! தீவிர முன்னெச்சரிக்கையில் பேரிடர் குழு!
Fengal Cyclone LIVE: வேகமெடுக்கும் ஃபெங்கல் புயல்! தீவிர முன்னெச்சரிக்கையில் பேரிடர் குழு!
Vetrimaaran: திமுகவிற்கு ஆதரவு, விஜய் மீது இவ்வளவு வன்மமா? வெற்றிமாறனின் விடுதலை 2 டிரெய்லரால் வெடித்த சர்ச்சை
Vetrimaaran: திமுகவிற்கு ஆதரவு, விஜய் மீது இவ்வளவு வன்மமா? வெற்றிமாறனின் விடுதலை 2 டிரெய்லரால் வெடித்த சர்ச்சை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: வேகமெடுக்கும் ஃபெங்கல் புயல்! தீவிர முன்னெச்சரிக்கையில் பேரிடர் குழு!
Fengal Cyclone LIVE: வேகமெடுக்கும் ஃபெங்கல் புயல்! தீவிர முன்னெச்சரிக்கையில் பேரிடர் குழு!
Vetrimaaran: திமுகவிற்கு ஆதரவு, விஜய் மீது இவ்வளவு வன்மமா? வெற்றிமாறனின் விடுதலை 2 டிரெய்லரால் வெடித்த சர்ச்சை
Vetrimaaran: திமுகவிற்கு ஆதரவு, விஜய் மீது இவ்வளவு வன்மமா? வெற்றிமாறனின் விடுதலை 2 டிரெய்லரால் வெடித்த சர்ச்சை
கனமழை - தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ( 27 - 11 - 24 ) மின்தடையை அறிவித்துள்ளது மின்சார வாரியம்
கனமழை - தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ( 27 - 11 - 24 ) மின்தடையை அறிவித்துள்ளது மின்சார வாரியம்
Schools Colleges Leave: புயல் எங்கே உள்ளது? நாளை பள்ளி-கல்லூரிகள் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: வானிலை அப்டேட்.!
Schools Colleges Leave: புயல் எங்கே உள்ளது? நாளை பள்ளி-கல்லூரிகள் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: வானிலை அப்டேட்.!
President Visit: உச்சகட்ட பாதுகாப்பில் ஊட்டி! இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் - திட்டம் என்ன?
President Visit: உச்சகட்ட பாதுகாப்பில் ஊட்டி! இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் - திட்டம் என்ன?
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
Embed widget