மேலும் அறிய

முப்படை தலைமை தளபதியாக பதவியேற்ற அனில் சவுகான்..!

ஓய்வு பெற்ற லெப்டின் ஜெனரல் அனில் சவுகான் இன்று நாட்டின் முப்படை தலைமை தளபதியாக பதவியேற்றுள்ளார்.

ஓய்வு பெற்ற லெப்டின் ஜெனரல் அனில் சவுகான் இன்று நாட்டின் முப்படை தலைமை தளபதியாக பதவியேற்றுள்ளார். முப்படை விவகாரங்களில் பாதுகாப்புத்துறை அமைச்சரின் முதன்மை ராணுவ ஆலோசகராகவும், செயலாளராகவும் ராணுவ விவகாரங்கள் துறையின் தலைவராகவும் பணியாற்ற உள்ளார்.

தலைமைப் பணியாளர்கள் குழுவின் நிரந்தரத் தலைவராகவும் அவர் பதவி வகிப்பார். முன்னதாக, கடந்த 2021ம் ஆண்டு, முப்படைகளின் தலைமை தளபதியாக பதவி வகித்த பிபின் ராவத் நீலகிரி மாவட்டம் வெலிங்கடனிற்கு வந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

பின்னர், நாட்டின் அடுத்த முப்படைகளின் தலைமை தளபதி யார்? என்ற கேள்வி எழுந்தது. முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதியாக நரவனே நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியானது. இதையடுத்து, இந்தியாவின் புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமிக்கப்பட்டார்.

முப்படைகளின் புதிய தலைமை தளபதியான அனில் சவுகான் 1961ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி பிறந்தவர். 1981ம் ஆண்டு 11வது கூர்கா ரைஃபிள் கிளப்பில் இணைந்து தனது ராணுவ சேவையைத் தொடங்கினார். அவர் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி அகாடமி மற்றும் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியிலும் பயிற்சி பெற்றவர்.

ராணுவத்தில் ஆற்றிய கடுமையான சேவைகள் காரணமாக படிப்படியாக பதவி உயர்வு பெற்ற அனில் சவுகான், வடக்குப் பிராந்தியத்தன் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். அவரது சிறப்பான செயல்பாடு காரணமாக அவர் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். லெப்டினல் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற கிழக்குப்பிராந்தியத்திற்கு 2019ம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்தவர். நாட்டிற்காக சுமார் 40 ஆண்டுகாலம் சேவையாற்றிய அனில் சவுகான் கடந்த 2021ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

 ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றாலும் தன்னுடைய சேவையை நாட்டிற்காக அனில் சவுகான் தொடர்ந்து கொண்டே இருந்தார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தேசிய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகித்து வந்தார். தற்போது நாட்டின் புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராணுவத்திற்காக அனில் சவுகான் ஆற்றிய சேவைகளை பாராட்டி அவருக்கு பரம்விசிஷ்ட் சேவா பதக்கம், உத்தம் யுத்சேவா பதக்கம், அடிவிசிஷ்ட் சேவா பதக்கம், சேனா பதக்கம் மற்றும் விசிஷ்ட் சேவா பதக்கங்களை இந்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது. புதிய தலைமை தளபதியாக தேர்வாகியுள்ள அனில் சவுகானுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வடகிழக்கு இந்தியாவில் சவாலான பல பகுதிகளில் தலைமை தாங்கிய அனுபவம் வாய்ந்தவர். ஜம்மு – காஷ்மீரிலும் நெருக்கடியான சூழலில் பணியாற்றியுள்ளார். மேலும், அங்கோலா நாட்டில் ஐ.நா. சார்பில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்றுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
Watch Video:
Watch Video: "ராஜா ராஜாதான்" அஜர்பைஜான் நாட்டில் ஒலித்த இசைஞானி பாடல் - பாடியது யார் தெரியுமா?
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
Embed widget