(Source: ECI/ABP News/ABP Majha)
ஆசியாவின் முதன்மையான குடல்நோயியல் மையம்... புதுச்சேரியில் தொடங்கப்பட்ட ஜெம் மருத்துவமனை..!
ஆசியாவின் முதன்மையான குடல்நோயியல் மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை மையமாக திகழும் ஜெம் மருத்துவமனை, புதுச்சேரியில் தனது கிளையை துவக்கியுள்ளது.
ஆசியாவின் முதன்மையான குடல்நோயியல் மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை மையமாக திகழும் ஜெம் மருத்துவமனை, புதுச்சேரியில் தனது கிளையை துவக்கியுள்ளது. சாரம் லாஸ்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள இந்த கிளையை, புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் என்.நமசிவாயம், பொதுப்பணித்துறை கே.லட்சுமிநாராயணன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
நுண்துளை அறுவை சிகிச்சையின் முன்னோடி நிபுணராகவும், ஜெம் மருத்துவமனை நிபுணராகவும் திகழ்ந்தவர் டாக்டர் சி.பழனிவேலு, நுண்துளை அறுவை சிகிச்சை முறையை முதல் முறையாக தென்னிந்தியாவில் அறிமுகம் செய்தவர். பல புதுமையான தொழில்நுட்ப முறைகளை அறுவை சிகிச்சை முறையில் புகுத்தி, பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் முன்னோடி மருத்துவனை:
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பயனாளிகளின் ஆதரவை பெற்று, வேகமான வளர்ச்சியை பெற்றுள்ளது ஜெம் மருத்துவமனை. ஜெம் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், இந்தியாவில் ஒரே ஒரு முன்னோடி பல வசதிகளையும் கொண்ட மருத்துவனையாக உள்ளது.
இவை தவிர, உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சை, பித்தப்பை, குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் பின்னர் சிறுநீரகவியல் மற்றும் மகப்பேறு துறைகளும் இந்த சிகிச்சை முறைக்கு ஒருங்கிணைந்த வயிற்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டன.
மருத்துவமனை துவக்க விழாவில் ஜெம் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் சி. பழனிவேலு பேசியதாவது:
ஜெம் இந்தியாவில் முதல்முறையாக குடல் நோய் மருத்துவத்திற்கென சிறப்பு மருத்துவமனையாக ஜெம் மருத்துவமனை துவங்கப்பட்டது.
தீர்க்க முடியாத பிரச்னைகளை தீர்த்த மருத்துவனை:
குறிப்பாக, குடல் புற்றுநோய், குடலிறக்கம், உடல்பருமன், கல்லீரல் பிரச்னைகள் மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை மற்றும் பின்னர் ரோபோ அறுவை சிகிச்சை போன்றவை மேற்கொள்ளப்பட்டன. ஜெம் மருத்துவனை தீர்க்க முடியாத பல பிரச்னைகளை புதிய தொழில்நுட்ப முறையால் தீர்த்து வருகிறது. அவற்றை உலகம் தரமான சிகிச்சையாக ஏற்றுக் கொண்டு தொடர்ந்து வருகிறது. எங்களது மருத்துவனை, உலகத்தரம் வாய்ந்த குடல் மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சைகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது.
பொதுமக்களிடையே பொதுவாக புற்றுநோய், மஞ்சள் காமலை, கல்லீரல் பிரச்னைகள், குடல் புண், மூல நோய், பௌத்திரம் போன்ற நோய்கள் காணப்படுகின்றன. கல்லீரல் அறுவை சிகிச்சை, கணையம் மற்றும் உணவுக்குழாய் போன்றவை மிகவும் சிக்கலானவை.
1980ம் ஆண்டுகளில் இதற்கான சிகிச்சைகள் இல்லை. வயிற்று பிச்னைகளுக்கு திறப்பு அறுவை சிகிச்சைகள் இருந்தன. மருத்துவமனையில் நீண்ட நாட்கள் தங்க வேண்டிய நிலையும், நீண்ட கால ஓய்வும் தேவையாக இருந்தது. ரத்த இழப்பும் அதிகமாக இருந்தது. ஜெம் மருத்துவமனை, நுண்துளை அறுவை சிகிச்சையை இந்தியாவில் பிற பெருநகரங்களில் அறிமுகமாவதற்கு முன்பே, தென்னிந்தியாவில் அறிமுகம் செய்தது.
திருச்சூரிலும் இந்த மருத்துவனையின் கிளைகள் உள்ளன. தற்போது, புதுச்சேரியில் தனது கிளையை துவக்கியுள்ளது. ஜெம் மருத்துவமனையில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
7500க்கும் மேற்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், 18000 குடலிறக்கம் சரி செய்யும் அறுவை சிகிச்சைகள், 3500 உடல் பருமன் அறுவை சிகிச்சை போன்றவை கோவையில் உள்ள மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை போன்றவை முக்கியத்துவம் பெற்று வருகின்றன. ஜெம் மருத்துவமனை குழு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையிலும் முன்னோடியாக திகழ்கிறது
அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. வலியில்லாமல், மருத்துவமனையில் குறைந்த நாட்களே தங்கி, விரைவாக குணமடைகின்றனர். நோயாளிகள் விரைவான தங்களது வழக்கமான பணிகளுக்கு திரும்புகின்றனர். பொதுமக்களுக்கு எவ்வித பயனும் இல்லாத எந்த சிகிச்சையும் அர்த்தமற்றது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். அனைத்து மக்களுக்கும் இந்த சிகிச்சையை எல்லோரும் பெறும் வகையில் நியாயமான கட்டணத்தில் ஜெம் மருத்துவமனை வழங்கி வருகிறது. நாட்டின் பல்வேறு பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு டாக்டர் சி. பழனிவேலு பேசினார்.
ஜெம் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பிரவீன் ராஜ் பேசுகையில், ”ஜெம் மருத்துவனை, தனது 30 ஆண்டு கால குடலியல் மற்றும் அதிநவீன நுண்துளை லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையை புதுச்சேரி மக்களும் எளிதாக பெற இங்கு தனது கிளையை துவக்கியுள்ளது. குடல்நோயியல் சிறப்பு மையம், குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை குடலிறக்க அறுவை சிகிச்சை மற்றும் சரி செய்தல், உணுவுக்குழாய் மற்றும் மேல்நிலை குடல் பகுதி அறுவை சிகிச்சை, கல்லீரல் அறுவை சிகிச்சை பித்தநீர் பை அறுவை சிகிச்சை, கணையம், குடல்வால், கல்லீரல் சிகிச்சை, உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சை, மற்றும் அமிலநீர் சுரப்பு அறுவை மேற்கொள்ளப்படுகின்றன," என்றார்.
ஜெம் மருத்துவமனையில் இயக்குனர் டாக்டர் பி. செந்தில்நாதன் பேசுகையில், "ஒரு நோயை, ஆரம்பநிலையில் கண்டறிந்து அதிநவீன சிகிச்சை அளிக்க சிறப்பு நிலை மருத்துவமனைகள் அவசியமாகின்றன. சிறப்பான சிகிச்சையை அளிப்பதில் கவனம் செலுத்துவதோடு, குடலியல் நோய்களை தடுப்பது பற்றியும், ஆரம்ப நிலையில் கண்டறியவும் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது ஜெம் மருத்துவமனை. மருத்துவ குடலியல் துறையில் சிறப்பான மையமாக செயல்படவுள்ள புதுச்சேரி ஜெம் மருத்துவமனை, ஒரு புனிதமான சிகிச்சையை நோயாளிகளுக்கு வழங்கும்," என்றார்.
ஜெம் மருத்துவமனை பற்றி:
ஜெம் மருத்துவமனை குடல்நோய்களுக்கான சிகிச்சை (குடல் புற்றுநோய், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் உடல் பருமன்) நுண்துளை அறுவை சிகிச்சைக்கான பெயர் பெற்ற மருத்துவமனை. ஜெம் மருத்துவமனை, இந்தியாவில் மட்டுமின்றி, உலக நாடுகளில் சிகிச்சையில் நோயாளிகளின் நம்பிக்கைய பெற்றுள்ளது.
உடல் பருமன் குறைப்பு, பித்தப்பை, பெருங்குடல், குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை, மகப்பேறியல், தழும்பில்லா சிகிச்சை போன்றவைகளுக்கு சிறப்பான இடத்தை பெற்று வருகிறது. ஜெம் மருத்துவமனையில் அதிநவீன, தற்கால கருவிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சிறப்பு பயிற்சி பெற்ற நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள், அர்ப்பணிக்கப்பட்ட துணை நிலை மருத்துவ பணியாளர்களை கொண்டது.
இந்தியாவில் முதல் முறையாக ஐஎஸ்ஓ 9001:2008 சான்று பெற்றதாக உள்ளது. தேசிய அளவிலான மருத்துவ தரநிர்ணய அமைவன சான்று (என்ஏபிஎச்) அங்கீகாரம் பெற்றது. உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை, பரிசோதனைகள், சிகிச்சை முறைகளை அளித்து வருகிறது.
நுண்துளை அறுவை சிகிச்சையில் உலக வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் கோயம்புத்துார், திருப்பூர், ஈரோடு, சென்னை மற்றும் கேரளாவில் திருச்சூரிலும் இந்த மருத்துவனையின் கிளைகள் உள்ளன. தற்போது, புதுச்சேரியில் தனது கிளையை துவக்கியுள்ளது.
ஜெம் மருத்துவமனையில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 7500க்கும் மேற்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், 18000 குடலிறக்கம் சரி செய்யும் அறுவை சிகிச்சைகள், 3500 உடல் பருமன் அறுவை சிகிச்சை போன்றவை கோவையில் உள்ள மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதிகரித்து வரும் கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை போன்றவை முக்கியத்துவம் பெற்று வருகின்றன. ஜெம் மருத்துவமனை குழு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையிலும் முன்னோடியாக திகழ்கிறது.