மேலும் அறிய

"ரயில்வே துறையை அழித்து விட்டார்கள்" - முன்னாள் ரயில்வேதுறை அமைச்சர்கள் கடும் சாடல்..!

ஒடிசா ரயில் விபத்தை முன்வைத்து முன்னாள் ரயில்வே அமைச்சர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த விபத்தில் மூன்று ரயில்கள் சிக்கியதில் குறைந்தபட்சம் 261 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான ரயில் விபத்தாக இது பார்க்கப்படுகிறது.

நேற்று இரவு 7 மணி அளவில் யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு, அருகில் இருந்த தண்டவாளத்தில் ஏறியது. அப்போது, எதிர்திசையில் இருந்து வந்து கொண்டிருந்த ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மீது தடம் புரண்ட யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் மோதியது.

சம்பவ இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு:

இதையடுத்து, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள், மேலும் சரக்கு ரயில் மீது மோதியது. இதனால், மொத்தம் 17 பெட்டிகள் தடம் புரண்டது. பிரதமர் மோடி தொடங்கி ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சிவர்  வரை மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள், பலத்த காயம் மற்றும் இலேசான காயம் அடைந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகமும், மத்திய அரசும் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. ரயில் விபத்து காரணமாக சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

"விபத்து தடுப்பு கருவி எங்கே போனது"

இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தை முன்வைத்து முன்னாள் ரயில்வே அமைச்சர்கள் கடுமையாக சாடியுள்ளனர். கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரையில், வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக பதவி வகித்த மம்தா பானர்ஜி, விபத்து தடுப்பு கருவி எங்கே போனது என கேள்வி எழுப்பியுள்ளார்.

"நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது விபத்து தடுப்பு கருவி செயல்பாட்டை அறிமுகப்படுத்தினேன். மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முன்பே சொல்கிறேன். விபத்து தடுப்பு கருவி பொருத்தாததுதான் இந்த கோரமண்டல் ரயில் விபத்துக்கே காரணம்" என மம்தா தெரிவித்துள்ளார்.

"அலட்சியமே காரணம்"

டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில், 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில், ரயில்வே அமைச்சராக பதவி வகித்த லாலு பிரசாத் யாதவ், அரசின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். "இந்திய ரயில்வே துறையை அழித்து விட்டார்கள். மிகப்பெரிய அலட்சியமே ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம்" என லாலு தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் ரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்த மல்லிகார்ஜுன கார்கே ரயில் விபத்து வேதனை தெரிவித்துள்ளார். "நமது சிறந்த பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரிடம் நான் பல கேள்விகளைக் கேட்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன. இதற்கு யார் பொறுப்பு என்று அவர்கள் பதில் சொல்ல வேண்டும்" என கார்கே தெரிவித்துள்ளார்.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget